விருதுநகர், மார்ச் 23- தேர்தல் வாக்குறுதிப்படி திமுக அரசு உடனடியாக பழைய பென் சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். படித்த இளைஞர்களின் நலன் கருதி பல்வேறு அரசுத் துறை களில் உள்ள 30சதவீத காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என் பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடை பெற்ற இப்போராட்டத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் பெ.முத் தையா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கா.கருப் பையா, டி.என்.பி.டி.எப் மாவட்டச் செயலாளர் செல்வகணேசன், பிச்சை ஆகியோர் தலைமை வகித் தனர். போராட்டத்தை துவக்கி வைத்து மாநில ஒருங்கிணைப்பா ளர் இரா.இளங்கோவன் பேசினார். நிறைவு செய்து மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் க.நீதிராஜா பேசினார். முத்துராமலிங்கம், மாரி யப்பன், பாலச்சந்திரன், போத்தி ராஜ், ஜேசுடெல்குயின், விஜய பாலன் உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர். காவல்துறை கெடுபிடி முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத் திட பந்தல் மற்றும் ஒலி பெருக்கி அமைக்கப்பட்டது. அதை சூலக் கரை காவல்துறையினர் அகற்ற வேண்டுமென கெடுபிடியில் ஈடு பட்டனர். இதையடுத்து, பந்தல் அகற்றப்பட்டது. பின்பு, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திரண்டு போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, மீண்டும் பந்தல் அமைக்கப்பட்டு போராட் டம் நடத்தப்பட்டது. சிவகங்கை சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் இராதாகிருஷ்ணன், சகாய தைனேஸ் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் நாகராஜன், ராம்குமார் முன்னிலை வகித்த னர். மாநில உயர்மட்டக்குழு உறுப் பினர் செல்வம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சேது செல்வம் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ராசா, சேசுராஜ், வனிதா, ஆரோக்கியராஜ், மலை ராஜ், பாண்டியராஜன், அருள், கண்ணதாசன், தமிழரசன், லதா, கோவிந்தராஜ் , ஜெய்சங்கர், ஜீவா னந்தம், தங்கபாண்டியன், சிவா, மாரி, முத்துச்சாமி ஆகியோர் ஆர்ப் பாட்ட உரையாற்றினர். இராமநாதபுரம் இராமநாதபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் இரா.சிவபாலன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் இல. விஜயராமலிங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் மு.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் படை வீரர் நலத் துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் தி. இளங்கோவன் சிறப்புரை ஆற்றி னார். தமிழ்நாடு ஆசிரியர் முன் னேற்ற சங்க மாவட்ட தலைவர் சோ. முருகேசன் வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் முனியசாமி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் இரா.பூப்பாண்டி யன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலா ளர் பெ.சேகர் ஆகியோர் உண்ணா விரதத்தினை விளக்கி பேசினர்.