மயிலாடுதுறை/புதுக்கோட்டை, நவ.9 - மயிலாடுதுறை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் புதனன்று வெளி யிட்டார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிர முகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா.லலிதா வெளி யிட்டார். மாவட்டத்தில் மொத்தம் 860 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் 763645. இதில் 376642 ஆண் வாக்காளர் களும், 386985 பெண் வாக்காளர் களும் மற்றும் இதர வகுப்பினர் 18 நபர்களும் உள்ளனர். மேலும் 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெறும் சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ன்படி 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கான சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 12.11.2022, 13.11. 2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. நேரில் சென்று விண்ணப்பம் செய்தோ அல்லது மொபைல் செயலி www.nvsp.in என்ற இணையதள முகவரியில் ஆன்- லைன் மூலமோ விண்ணப்பிக்க லாம். ஏனைய நாட்களில் வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்ட அலு வலகங்கள் மற்றும் நகராட்சி அலு வலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் அளிக்கலாம். பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவிக் கப்பட்டுள்ளது.
முசிறி
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக புதன்கிழமை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. இந்தப் பட்டியலில் முசிறி சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,26,112 வாக்காளர்கள் இடம் பெற் றுள்ளனர். இதில் ஆண் வாக்கா ளர்கள் 1,10,158, பெண் வாக்காளர் கள் 1,15,932, திருநங்கைகள் 22 வாக்காளர்கள் உள்ளனர். இந்தப் பட்டியலை கோட்டாட்சியர் அலு வலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அர சியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், கோட்டாட்சியர் மாதவன் வெளியிட்டார். இந்தப் பட்டியலானது முசிறியில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அலு வலகங்கள் (கோட்டாட்சியர் அலு வலகம்), உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் (வட்டாட்சியர் அலுவலகம்), வாக்குச் சாவடி களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: 13,40,076 வாக்காளர்கள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் 2023 மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார். அதில் புதுக் கோட்டை மாவட்டத்தில் கந்தர்வ கோட்டை, விராலிமலை, புதுக் கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளில் ஆண் வாக்கா ளர்கள் 661124, பெண் வாக்கா ளர்கள் 678887, மூன்றாம் பாலினத்த வர் 65 என மொத்தம் 13 லட்சத்து 40 ஆயிரத்து 76 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், இளம் வாக்காளர்கள் 6938 பேர் உள்ள னர். மேலும் இதில் மொத்தமாக 5422 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 28,472 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.