புதுக்கோட்டை, நவ.10 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடியை அடுத்த புள்ளாச்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தமிழக அரசின் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்டு, சிறந்த பள்ளி களை தேர்வு செய்து கேடயம் வழங்கி வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் புள்ளாச்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. நவ.14 ஆம் தேதி சென்னை யில் நடைபெற உள்ள அரசு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரு துக்கான கேடயத்தை வழங்க உள்ளார். இப்பள்ளிக்கு மக்கள் பங்களிப்பு டன் வகுப்பறைகள், வராண்டா, கழி வறை போன்ற பகுதிகளில் டைல்ஸ் பதிக்கப்பட்டது. அறைக்குள் பால் சீலிங் அமைக்கப்பட்டு மின்விளக்கு கள், மின் விசிறிகள் பொருத்தப்பட்டன. அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போர்டு பெறப்பட்டது. மேடை, மின்விசிறி, மின் விளக்குகளைக் கொண்ட கலையரங்கம் அமைக்கப்பட் டது. ஸ்மார்ட் டிவி, இன்வெர்டர், இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பள்ளி வளாகம் முழுவதும் பேவர் பிளாக் தளமும் அமைக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்களின் முயற்சியினால் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. இவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தொகுதியின் அமைச்சரான சிவ.வீ.மெய்யநாதன், பள்ளியின் ஆண்டு விழாக்களில் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தி வரு வதோடு, பல்வேறு வகைகளில் உதவி யும் செய்து வருகிறார். பள்ளியில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளால் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. கடந்த 2019-20 இல் 17 ஆக இருந்த மாண வர்களின் எண்ணிக்கை தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது. மாணவர்களின் படைப்பாற்றலை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து புள்ளாச்சி குடியிருப்பு பள்ளியை, சிறந்த பள்ளி யாக தமிழக அரசு தேர்வு செய்திருப்பது ஆசிரியர்கள், அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.