districts

img

வெளி மாநிலத் தொழிலாளர்களை அடைத்து வைத்து துன்புறுத்தல்

நாமக்கல், நவ.12- வெளி மாநிலத் தொழிலாளர் களை அடைத்து வைத்து துன்பு றுத்தி, அவர்களது பொருட்களை பறிந்த சம்பவத்தை கண்டித்து, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு-வினர் போராட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகே உள்ள வையப் பமலை, மொஞ்சனூர் வக்கீல் தோட்டத்தில் கடந்த நவ.7. ஆம் தேதியன்று, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்களை அடைத்து வைத்து அடித்து துன்பு றுத்தி, அவர்களது பணம் மற்றும் செல்போன்களை பாரதிராஜா என் பவர் பறித்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி, இந்திய  தொழிற்சங்க மையத்தினர் (சிஐ டியு), எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் முறையிட்டனர். மேலும், தொழிலாளர்களின் உடை மைகளை மீட்டுத்தர வேண்டுமென  வலியுறுத்தி, எலச்சிபாளையத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால், எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படாத நிலை யில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு-வினர் செவ்வாயன்று காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சிஐடியு மாவட்ட உதவிச்செய லாளர் சு.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ந. வேலுசாமி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், கிழக்கு, மேற்கு ஒன்றியச் செயலா ளர்கள் தேவராஜ், ரமேஷ், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ராஜி, விஜய், சக்திவேல், லட்சுமி, பால கிருஷ்ணன், ஆட்டோ தொழிலாளர்  சங்க மாவட்டத் தலைவர் பொன்னு சாமி, சாலை போக்குவரத்து சங்க  மாவட்டப் பொருளாளர் சக்திவேல்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து நல்லிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் பாலமுரு கன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடு பட்டு, இப்பிரச்சனையில் உரிய  தீர்வு காணப்தாக உறுதியளித் தார். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.