திருத்துறைப்பூண்டி, ஜூன் 23 - தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் திருத்துறைப் பூண்டி நகர 9 ஆவது மாநாடு தோழர் பி.சீனிவாசராவ் அரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு நகர தலைவர் டி.வி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சங்க கொடியினை வி.எஸ்.கே.கிருஷ்ணமூர்த்தி ஏற்றி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.தமிழ் மணி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். துணை செயலா ளர் கே.கார்த்தி வரவேற்று பேசினார். விவசாயிகள் சங்க மாநில தலைவர் வி.சுப்பிர மணியன் துவக்க உரை யாற்றினார். நகரச் செயலா ளர் எம்.ஜெயபிரகாஷ், நகரப் பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.சேகர், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.சாமிநா தன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி, சிபிஎம் நகர செயலாளர் கே. கோபு ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலிய பெருமாள் நிறைவுரை ஆற்றி னார். நகர கமிட்டி தலைவ ராக ஜீ.தமிழ் மணி, செயலாள ராக எம்.ஜெயபிரகாஷ், பொருளாளராக சி.பாஸ்கர், துணைத்தலைவராக ஆர்.எம்.சுப்பிரமணியன், துணை செயலாளராக பி.தங்கமணி உள்ளிட்ட 12 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். தேசிய நகர்ப்புற வங்கி தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கங்க ளிலும் விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி விவசாய கடன் வழங்கிட வேண்டும். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட திருத் துறைப்பூண்டி பகுதியில் வைக்கோலை பயன்படுத்தி தொழிற்சாலை உருவாக்கிட வேண்டும். நகரத்தில் உள்ள 37 குளங்களையும் அள வீடு செய்து ஆக்கிரமிப்பு களை அகற்றி மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.