மயிலாடுதுறை, பிப்.24- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பாக, வரும் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய 3 நாட்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கும் மருத்துவ முகாம் தொடர்பாக துறை அலுவ லர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், இணை இயக்குநர் (மருத்துவம் (ம) ஊரக நலப் பணி கள்) மரு.ஆர்.மகேந்திரன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பி.பிரதாப், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.