திருச்சிராப்பள்ளி, நவ.30- திருச்சி - தஞ்சை ரயில்வே மார்க்கத் தில் திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்பு உள்ள மஞ்சத்திடல் ரயில்வே தண்ட வாளத்தை இருபுறமும் மக்கள் கடந்து செல்வதற்கு மஞ்சதிடல் கேட் எண் 321, விவேகானந்தா நகர் அருகில் கேட் எண் 322 ஆகிய இரண்டு சுரங்கப்பாதை அமைக் கும் கட்டுமானப் பணி துவங்கி பல மாதங்க ளாக நிறைவு பெறாமல் உள்ளது. இதனால், மகாலெட்சுமி நகர், நாகம்மை வீதி, விவேகானந்தா நகர், வெங்கடேஸ் வரா நகர், ராஜீவ்காந்தி நகர், இந்திரா காந்தி நகர், தங்கேஸ்வரி நகர், மாஜி ராணுவ காலனி, சோமசுந்தரம் நகர், மூகாம்பிகை நகர், மீனாட்சி நகர், ஆலத்தூர் பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சென்றுவர முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இரண்டு இடங்களில் நடை பெற்று வரும் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்திட கோரி புதனன்று திருச்சி மாநகர குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி ரயில்வே மண் டல மேலாளரை சந்தித்து மனு கொடுக்கப் பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட ரயில்வே மண்டல மேலாளர், உடனடியாக கவனம் செலுத்தி விரைந்து பணியை முடித்திட ஆவன செய்வதாக ஒப்புதல் அளித்தார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பா ளர்கள் சக்திவேல், சுப்பிரமணியன், பா. லெனின் மற்றும் மகாலட்சுமி நகர் நல சங்க நிர்வாகிகள், விவேகானந்தா நகர் மகாத்மா காந்தி நினைவு பொதுநல சங்கத்தினர், நாகம்மை வீதி விஸ்தரிப்பு குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.