districts

img

திருவாரூர் மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுமா? விவசாயத் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

குடவாசல், அக்.12 - பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக திருவாரூர் மாவட்டம்  கொரடாச்சேரி ஒன்றியத்தில் 8 மையங் களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் நூறு நாள் வேலையை உடனடியாக  துவங்க வேண்டும். சட்டக் கூலி ரூ.281-ஐ முழுமையாக வழங்க வேண்டும். ரேசன் கடை யில் வழங்கப்படும் உணவுப் பொருள் தரமாக வும், தட்டுப்பாடின்றியும் வழங்க வேண்டும்.  அரசவனங்காடு, குளிக்கரை, கண்கொடுத்த வனிதம் மற்றும் அத்திக்கடை ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங் களில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை அலைக்கழிக்காமல், உயிர் காக்கும் மருந்து கள் வழங்க வேண்டும்.  பழுதடைந்துள்ள கிராம சாலைகளை பழுது நீக்கி, தரமான சாலை அமைக்க வேண்டும். விவசாயப் பயன்பாட்டிற்கு தடையின்றி மின்சாரம் வழங்கிட வேண்டும். கோயில் இடங்களில் குடியிருப்போர் அனை வருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும்.  விண்ணை தொடும் டீசல், பெட்ரோல், கேஸ் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவை களை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பி. கண்ணுசாமி தலைமை வகித்தார்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் கோரிக் கையை விளக்கி உரையாற்றினார். தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர்  எஸ்.தம்புசாமி, ஒன்றிய தலைவர் பி.பரம சிவம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.ஜெய பால், மாவட்ட குழு உறுப்பினர் கே.சீனிவாசன்,  கே.எஸ்.செந்தில் கலந்து கொண்டனர். இதேபோல், குளிக்கரையில் எம்.தங்க ராசு தலைமையில் நடந்த போராட்டத்தில், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட  செயலாளர் ஆர்.குமாரராஜா கோரிக்கை களை விளக்கி பேசினார். சங்கத்தின் ஒன்றிய  தலைவர் ஆர்.மருதையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அரசவனங்காடு கடை வீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு என்.சிவதாஸ் தலைமை ஏற்றார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எம்.கலைமணி கோரிக்கையை விளக்கி பேசினார்.  முசிறியம் பகுதியில் நடைபெற்ற போராட் டத்திற்கு எஸ்.நடராஜன் தலைமை வகித் தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் பி.கந்தசாமி கோரிக் கையை விளக்கி உரையாற்றினார். திருக் கண்ணமங்கையில் நடைபெற்ற போராட்டத்திற்கு கே.கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஆர். மணியன் கோரிக்கையை விளக்கி பேசி னார்.  வடகண்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கே.கலியமூர்த்தி தலைமை வகித் தார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.கோபிராஜ், விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செய லாளர் கே.செந்தில் ஆகியோர் கோரிக் கையை விளக்கி உரையாற்றினர்.