தஞ்சாவூர், நவ.8 - பேராவூரணி நகரில் பேரூராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகளை கடந்த நிலையில், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சியாகும். 18 வார்டுகளை கொண்ட பேராவூரணி பேரூராட்சி பகுதியில் மட்டும் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் இயற்கை எய்தினால், ஆவணம் சாலை யில் பெரியகுளம் ஏரி எதிரே உள்ள, பேரூராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டில் எரிப்பது வழக்கம். இந்நிலையில், பொதுமக்கள் கோரிக் கையை ஏற்று, பேராவூரணி சட்டப்பே ரவை உறுப்பினர் நா.அசோக்குமார் பரிந்துரையின்பேரில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022 இன்கீழ் நவீன எரிவாயு தகன மேடை ரூ.1 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டு உள்ளது. கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டை கடந்த நிலையில், எரிவாயு தகனமேடை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது மழைக்காலமாக இருப்ப தால், இயற்கை எய்துவோரை எரிக்க காய்ந்த விறகுகள் கிடைக்காமல், இறந்தவரது உறவினர்கள் தவித்து வருகின்றனர். மேலும், மர விறகு, டயர்கள் என எரியூட்டுவதற்கு பெரு மளவு பொருளாதாரத்தை செலவிட முடியாமல் பொதுமக்கள் பரிதவிக்கின் றனர். மேலும், முன்புபோல விறகைக் கொண்டு எரியூட்டும் தொழிலாளர் களும் கிடைப்பதில்லை. எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு வந்தால் மட்டுமே பிரச்சனைகள் தீரும் நிலை உள்ளது. பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு வழக்கு நடை பெற்று வருகிறது. இதுகுறித்து விசா ரணை நடத்த வேண்டும் என உயர்நீதி மன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே இருந்த செயல் அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பேரூராட்சி நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய, தஞ்சாவூரில் உள்ள பேரூ ராட்சிகளின் உதவி இயக்குநர், கல்லா கட்டுவதிலேயே குறியாக இருப்பதால், எதையும் கண்டு கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், துக்க நிகழ்வுகளுக்கு செல்லும் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினரிடம் பொது மக்கள் எரிவாயு தகனமேடை குறித்து கேள்வி எழுப்புவதால், தர்ம சங்கடத் திற்கு ஆளாகி வருகிறார். எனவே, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் இதுகுறித்து விசாரணை நடத்தி, உடனடியாக எரிவாயு தகன மேடையை திறக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.