districts

img

சாலையோரம் குவியும் குப்பைகளால் மக்கள் அவதி

மயிலாடுதுறை, பிப்.6- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்  சாலையின் ஓரத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே அமைந்துள்ள பாலம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.  இரவு நேரங்களில் சிலர் வாகனங்களில் எடுத்து வந்தும் குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டி வரு கின்றனர். இதில் இறந்த விலங்கினங்கள், கோழி கழிவு கள், மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், அழுகிய காய்கறி கள் உள்ளிட்ட பொருட்கள் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசி வருகின்றன.  இதனால் அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். குப்பை களை கொட்டுவதற்கு ஊராட்சிகள் சார்பில் இடத்தை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. ஆனால் உரிய இடம் தேர்வு செய்ய முடியா மல் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.  எனவே, குப்பைகளை கொட்ட உரிய இடத்தை தேர்வு  செய்து, குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை காப்பாற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.