districts

img

குண்டும் குழியுமான சாலையால் மக்கள் அவதி

பாபநாசம், நவ.8 - தஞ்சாவூர் மாவட்டம் பண்டார வாடையிலிருந்து தேவராயன்பேட்டை செல்லும் சாலை ஒரு கிலோ மீட்டருக்கு மேல் குண்டும், குழியுமாக இருக்கிறது. இத னால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்தச் சாலையை சோலைபூஞ்சேரி, பொன்மான் மேய்ந்த நல்லூர், கிடங்காநத்தம், தேவராயன் பேட்டை, புளிமங்கலம் உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  குண்டும் குழியுமாக உள்ள இந்தச் சாலை  வழியே சென்று வந்த மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டதால் ராஜகிரி, பாபநாசம் பகுதி மாணவர்கள், பள்ளிக்கு நடந்தே சென்று வருகின்றனர். இந்த சாலையை உடனடியாக சீரமைப்பதுடன், அரசுப் பேருந்தையும் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.