பகுதிநேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, அக்.9 - செப்டம்பர் மாதத்துக் கான ஊதியம் வழங்கப்ப டாததைக் கண்டித்து புதுக்கோட்டையில் பகுதி நேர ஆசிரியர்கள் செவ் வாயன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவ லக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு, பகுதிநேர ஆசிரி யர் சங்க செயலர் அ.மதி ராஜா தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாவட்டச் செயலர் பழனிச்சாமி உள்ளிட் டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். பகுதிநேர ஆசிரி யர்கள், கல்வித் திட்டப் பணியாளர்கள் உள்ளிட் டோருக்கு இன்னும் வழங்கப்படாமல் இருக் கும் செப்டம்பர் மாதத்துக் கான ஊதியத்தை விரை வில் வழங்க வேண்டும். அனைத்து தற்காலிக ஆசிரியர்களையும் நிரந்த ரப்படுத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப் பப்பட்டன.
புகையிலை விற்பனை: கடைகளுக்கு சீல்
தஞ்சாவூர், அக்.9 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஆவணம் கடை வீதியில் தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசியத் தகவலின் பேரில், பேராவூரணி வட்டார உணவுப் பாது காப்பு அலுவலர் வேல்முருகன் தலைமை யில், புதன்கிழமை ஆவ ணம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு சுமார் 30 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டது. புகாரின் அடிப் படையில் மற்றொரு கடை என, 2 கடைகளும் தற்காலிகமாக 15 நாட்க ளுக்கு பூட்டி சீல் வைக்கப் பட்டன.
கல்லணைக் கால்வாயில் கரை ஒதுங்கிய திமுக நிர்வாகி சடலம்
தஞ்சாவூர், அக்.9 - தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வா யில் திமுக நிர்வாகியின் சடலம் செவ்வாயன்று கரை ஒதுங்கிக் கிடந்தது. தஞ்சாவூர் மகர்நோன் புசாவடி வண்டிக்காரத் தெரு வெங்கடேசப் பெரு மாள் கோயில் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் அசோகன் (62). இவர் திமுக நெசவாளர் அணி மாநகர துணை அமைப் பாளராக இருந்து வந்தார். திங்கள்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்நிலையில், தஞ்சா வூர் அருகே சூரக் கோட்டை கல்லணைக் கால்வாயில் இவரது சடலம் செவ்வாயன்று கரை ஒதுங்கிக் கிடந்தது. தகவலறிந்த தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத் தினர் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, அசோகன் எப்படி உயிரிழந்தார், இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.
பருவமழை முன்னெச்சரிக்கை தீயணைப்புத் துறை ஒத்திகை பயிற்சி
தஞ்சாவூர், அக்.9 - வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடை பெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் ஆலயத் திருக்கு ளத்தில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் இரா.தெய்வானை முன்னிலை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி கள் துறை நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில், நீலகண்டன், ரஜினி, சரவண மூர்த்தி, பேராவூரணி வினோத் உள்ளிட்ட வீரர்கள் மழை, வெள்ளத்தில், விபத்தில் சிக்கியவர்களை மீட்பது எவ்வாறு, ஆற்றில் தண்ணீர் அதிகளவு வரும் போது சிக்கிக் கொண்டால் தங்களுக்கு கிடைக்கும் பிளாஸ்டிக் கேன்கள், காற்று அடிக்கப்பட்ட டியூப்களை பயன்படுத்தி தங்களை தாங்களே தற்காத்துக் கொள்வது, மின் விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில், வரு வாய்த் துறையினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி
பாபநாசம், அக்.9 - தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் தூய்மைப் பணி நடந்து வருகிறது. அதனொரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சுவாமிமலை ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி முகாம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம், சுவாமிமலை லயன்ஸ் சங்கம், திருவலஞ்சுழி ஊராட்சி மன்றம், சுவாமி மலை அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் உள்ளிட்டோர் இணைந்து நடத்திய தூய்மை பணி முகா மில், ரயில் நிலையம் முழுவதும் செடி கொடிகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டன. இருப்பு பாதையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. இதில் சுமார் 80 பேர் ஈடுபட்டனர். தூய்மைப் பணியை திரு வலஞ்சுழி ஊராட்சி மன்றத் தலைவி திவ்யா முன்னிலை யில் லயன் சங்கம் மாவட்டத் தலைவர் மாணிக்கம் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பா ளர்கள் சங்க துணைத் தலைவர் மாறன், செயலர் கிரி, பொருளாளர் நடராஜ்குமார், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலர் சரவணன், தெற்கு ரயில்வே இளநிலை பொறியா ளர் முத்துரங்கன், சுவாமிமலை லயன்ஸ் சங்கத் தலைவர் மீரா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாஸ்கர், ஊராட்சி மன்ற எழுத்தர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பருவமழையை எதிர்கொள்ளத் தயார் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
என்.நேரு பேட்டி புதுக்கோட்டை, அக்.9 - பருவமழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டியில், “வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற் காக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி இருக்கிறோம். வெள்ளம் ஏற்படும்போது, தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக பல இடங்க ளில் உணவு தயாரிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இயல்பான மழை பெய்தால் எந்தப் பாதிப்பும் இருக்காது. ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மிக கனமழை பெய்யும் போதுதான் பெருவெள்ளம் ஏற்படுகிறது. அந்தத் தண்ணீரை அப்புறப்படுத்த மோட்டார்களும் ஏற்பாடு செய்யப் படவுள்ளன. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 2600 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்தப் பட்டது. ஒரு லட்சம் பேர் பங்கேற்றார்கள். அவர்களில் இருந்து 7 ஆயிரம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேர்காணலில் 2,600 காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்” என்றார்.
43 மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: அரசுப் பள்ளி கணித ஆசிரியர் கைது
தஞ்சாவூர், அக்.9 - தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (35), இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மீது கடந்த ஆக.12 ஆம் தேதி மாணவியரின் பெற்றோர் சிலர், சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்கு புகார் அளித்தனர். அதில், 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவியரிடம், முத்துக்குமரன் பாலியல் ரீதியாக தொந்த ரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆக.13 அன்று, சைல்ட் ஹெல்ப் லைன் வழக்கு பணியாளர் செண்பக மலர், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியரின் அனுமதியோடு, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளிடம், பாலியல் தொடர் பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். பிறகு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் முத்துக் குமரன் தொடர்பாக, 43 மாணவிகளிடம் துண்டு சீட்டில் எழுதி தர கூறியுள்ளனர். அதில் மாணவிகள் பலரும் ஆசிரியர் முத்துக் குமரன் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக எழுதி கொடுத்ததை கண்டு, சைல்ட் ஹெல்ப் லைன் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சைல்ட் ஹெல்ப் லைன் அமைப் பினர், தங்களின் விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத் தனர். அதன்பேரில், கணித ஆசிரியர் முத்துக் குமரன் கடந்த ஆக. 14 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையில், கல்வித்துறை தரப்பில் எவ்வித புகாரும் கொடுக்காமல் இரண்டு மாதம் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் மீண்டும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினரை தொடர்பு கொண்டு கேட்ட போது, முத்துக்குமரன் மீது எவ்வித வழக்கும் பதியவில்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில், புதன்கிழமை பெற்றோர் கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தப் போவ தாக அறிவித்தனர். சைல்டு ஹெல்ப்லைன் வழக்கு பணியாளர் செண்பகமலர் என்பவர் கணித ஆசிரியர் முத்துக்குமரன் மீது நடவ டிக்கை எடுக்க கோரி ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செவ்வாயன்று புகார் அளித்தார். அதன் பேரில், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ பிரிவில் முத்துக்குமரன் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். விசாரணையில், முத்து குமரன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.