பாபநாசம், பிப்.13 - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாபநாசம் பேரூராட்சி 5 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜார்ஜ், 5 ஆவது வார்டிற்குட்பட்ட மெஷின் தெரு வில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் ஜார்ஜ் கூறு கையில், ‘நான் உறுப்பினராக தேர்ந்தெ டுக்கப்பட்டால் அனைத்து வீடுகளுக் கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வும், தெருவில் மழைநீர் வடிகால், மழை நீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்திட முயற்சி மேற்கொள்வேன். நூறு நாள் வேலைத் திட்டத்தை பாபநாசம் பேரூராட்சி பகு திக்கும் விரிவாக்கம் செய்திட முயற்சி எடுப்பேன். குடிமனைப் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா பெற்றுத் தருவேன். பல்வேறு தொற்று வியாதி களை ஏற்படுத்திடும் குப்பைமேட்டை அகற்ற நடவடிக்கை எடுப்பேன்” என வாக்குறுதி அளித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மனோகரன், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் முரளிதரன், திமுக பாபநாசம் ஒன்றிய விவசாய அணி நிர்வாகி செந்தில்குமார், வீர மாங்குடி திமுக நிர்வாகி முருகானந் தம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.