districts

img

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய வகுப்பறைக்கு அடிக்கல்

தஞ்சாவூர், அக்.10 -  தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், வெட்டு வாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், குழந்தை நேயப் பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இரு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் மற்றும் கணினி ஆய்வுக்கூடம் ரூ.51.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வியாழக் கிழமை காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார். திருவோணம் திமுக தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் சோம.கண்ணப்பன் முன்னிலை வகித்தார். நிகழ்வில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொய்யாமொழி, கண்ணன், ஒன்றியப் பொறியாளர் ஹேமலதா, பள்ளி தலைமையாசிரியர் ரெ.கவிதா மற்றும் கட்சியினர், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.