புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டையைச் சேர்ந்த சே.தா.பஷீர் அலிக்கு தமிழக அரசின் சொந்த நூலகத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. ‘ஞானக்கருவூலம்’ என்ற பெயரில் சொந்த நூலகம் நடத்தி வரும் இவருக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா விருதினை வழங்கினார். இதேவேளையில், திருமயம் கிளை நூலகர் மு.மாலதி மற்றும் வாசகர் வட்டத் தலைவர் கே.பிரபாகரன் ஆகியோர் பெற்ற தேசிய விருதுகளும் பாராட்டப்பட்டன.