districts

img

மாப்படுகையில் விவசாயிகள் சங்கம் சார்பில் இயற்கை வேளாண் இடுபொருள் பயிற்சி முகாம்

மயிலாடுதுறை, செப்.11-  மயிலாடுதுறை அருகேயுள்ள மாப்படு கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், யாழ் இயற்கை வேளாண் பண்ணை இணைந்து ஒரு நாள் இயற்கை வேளாண் இடுபொருள் பயிற்சி முகாமை ஞாயிறன்று நடத்தின.  இயற்கை விவசாயி அ.இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற முகாமை தமிழ்  நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் எஸ்.துரைராஜ் துவக்கி வைத்து இயற்கை விவசாயம் குறித்த தனது அனு பவங்களை பகிர்ந்துக்கொண்டார்.  கால் கிலோ நெல்லை விதைத்து 4 ஆயிரம் கிலோ அறுவடை செய்த ஆலங்குடி ஆர்.பெருமாள் சாதனை மகசூல் குறித்தும், இயற்கை உரம் குறித்து எஸ்.மதியழகன், இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம் சந்தை வாய்ப்பு குறித்து ஆர்.கணேசன், இயற்கை வேளாண்மை விளைபொருள் தொழில்நுட்பம் குறித்து பொறியாளர் விவ சாயி எஸ்.சரவணக்குமார் ஆகியோர் விவ சாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். 

இயற்கை முறை  விவசாயத்தில் 70 மூட்டை நெல் பெறலாம் 
இயற்கை வேளாண் பயிற்சி குறித்து இயற்கை விவசாயி அ.இராமலிங்கம் கூறு கையில், இயற்கை முறையில் விவசாயம் செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு 50 முதல் 70 மூட்டை வரை அறுவடை செய்யலாம் ஆனால் இரசாயன உரங்களை நம்பி வெறும் 25 லிருந்து 35 மூட்டை வரையே அறுவடை செய்கின்றனர். தரமான விதை களையும், நாட்டு மாடுகளையும் புறக்க ணித்ததன் விளைவாகவே இன்று விவ சாயம் பெரும் கேடாய் மாறியிருக்கிறது. நெல்  பயிரிடுவதற்கு நாற்றாங்காலை தயார்ப் படுத்தும் போதே நடவு செய்யப்படும் நிலத்  தையும் தயார் செய்து இலை, வேம்பு, எருக்கன் உள்ளிட்ட தழைகளைப்போட்டு சேறு உண்டாக்கி குறைந்தது 30 நாட்க ளாவது இருக்க வேண்டும்.குறைவான வய துடைய நாற்றுகளை தேர்வு செய்து நாற்று நட்டால் ஒரு நாற்று தூரில் 100 லிருந்து 120  கிளை வெடித்து அதிக மகசூலை தரும் .பழைய சேற்றில் நாற்று நடுவதால் களை களும் இருக்காது. அதேப்போன்று கண ஜீவாமிர்தம், ஜீவாமிர்தம், மூலிகை பூச்சி விரட்டி,மீன் அமிலம்,தேமூர் கரைசல் ஆகிய இயற்கை முறைகளை பயன்படுத்துவதால் மண்வளம் முற்றிலும் பாதுகாக்கப்பட்டு வள மாக இருக்கும், நன்மை தரும் பூச்சிகள் அழி யாது, காற்று ,நீர் மாசுபடாது. மழை வெள்  ளங்களில் பயிர்கள் சாய்ந்து நாசமாகாது. ஆனால் இரசாயன உரங்களை பயன்படுத்தி னால் மகசூலும் இருக்காது, மண், காற்று, நிலத்தடி நீர் எல்லாம் மாசுபடுவதோடு உண வுப்பொருளும் நஞ்சாகி நோய்களை உரு வாக்கி மனித உயிர்களை அழித்து விடும்.  

காலங்காலமாய் இயற்கையை மட்டும் நம்பிய விவசாயிகள் நவீன உலகில் இரசா யன உரங்களை நம்பியதன் விளைவுதான் இன்று பாதிப்புகளை சந்தித்து வருகின்ற னர். விவசாயிகள் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்  கோளாடு துவக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாமை மாநிலம் முழுவதும் பரவலாக்கி இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து செயல்பட உள்ளோம் என்று தெரிவித்தார். பயிற்சி முகாம் குறித்து மண லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கே.கே. ஆர் .செந்தில்குமார் கூறுகையில், . இயற்கை  முறையில் விவசாயம் செய்து வந்த விவசாயி களை ரசாயனங்களை பயன்படுத்த வைத்து  விட்டனர். தற்போது தொடந்து விவசா யத்தில் பாதிப்புகள் ஏற்பட்ட பிறகே விவசாயி கள் இயற்கை விவசாயம் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், யாழ் இயற்கை வேளாண்  பண்ணை முன்னெடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டுக்குரியது என கூறினார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயி லாடுதுறை ஒன்றிய செயலாளர் சி.மேக நாதன் நன்றி கூறினார்.