districts

திருச்சி முக்கிய செய்திகள்

மின்சார பாதுகாப்பு  விழிப்புணர்வு

அரியலூர், நவ.10 - அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மின்சார வாரி யம் சார்பில், மின்சார பாதுகாப்பு மற்றும் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளி யின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அரியலூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் உரை யாற்றினார். நிகழ்ச்சி யில் உதவி செயற்பொ றியாளர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டார். முன்னதாக பள்ளியின் ஆற்றல் மன்ற பொறுப்பா ளர் செந்தில்குமரன் வர வேற்றார். ஆசிரியர் செந் தமிழ் செல்வன் நன்றி கூறினார்.

கிளை மாநாடு

திருச்சிராப்பள்ளி, நவ.10 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விரைவு  போக்குவரத்து கழக கிளை மாநாடு கட்சியின்  ரஞ்சிதபுரம் அலுவல கத்தில் நடைபெற்றது. கிளைச் செயலாளராக முத்துவேல் தேர்வு செய்யப்பட்டார். 

நவ.28 பேரணியில் பங்கேற்க சிஐடியு முடிவு

அரியலூர், நவ.10 - அரியலூர் மாவட்டம்  சிஐடியு மாவட்டக் குழு  கூட்டம் தலைவர் கிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி. துரைசாமி வேலையறிக் கையை முன்வைத்தார். ரயில்வே (டிஆர்இயு)  தேர்தல் சம்பந்தமாக நட்சத்திர சின்னத்தில் ஓட்டு கேட்டு பிரச்சாரம்  செய்வது, ரயில்வே கால னியில் தொழிலாளிகளி டம் ஓட்டு கேட்பது, நவ. 28 அன்று நடைபெறும்  பேரணி-பொதுக்கூட்டத் தில் சிஐடியு மாநிலச் செய லாளர் ஜி.சுகுமாரன் கலந்து கொள்கிறார். அரியலூரைச் சேர்ந்த சங்க உறுப்பினர்கள் அதில் கலந்து கொள் வது உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

மானியத்தில்  இடுபொருட்கள் வழங்கல்

பாபநாசம், நவ.10 - தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் வினோதா வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில், “அம்மாப் பேட்டை வட்டாரத்தில் தோட்டக் கலைத் துறை யின் மூலம் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2024 - 25 ஆம் ஆண்டு தேர்வான கிராமங்களான கம்பர்  நத்தம், கருப்ப முதலியார் கோட்டை, நெடுவாசல், கீழக்கோயில் பத்து, இடையிருப்பு, பள்ளியூர், ராரா முத்திரக்கோட்டை, செண்பகபுரம், செரு மாக்கநல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் இலவசமாக தென்னங் கன்றுகள், இடுபொருட் கள் ரூ.18,000 (ஹெக்டேர்) மானிய விலையில் வழங் கப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.

பயிர் காப்பீட்டு திட்ட விவரங்களை சரிபார்த்து விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

தஞ்சாவூர், நவ.10 -  பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு எதிர்பா ராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு, இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்க ளின் பண்ணை வருவாயை நிலைப்படுத்த வும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2020 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு ராபி மற்றும் ரபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீட்டு  திட்டத்தை செயல்படுத்திட தஞ்சாவூர் I  பகுதிகளுக்கு ஷேமா (KSHEMA) பொது  காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் Iல் தஞ்சாவூர் (பூதலூர் மற்றும் கண்டியூர் பிர்கா தவிர)  ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் மற்றும் அம்மாபேட்டை (அய்யம்பேட்டை மற்றும் பாபநாசம் பிர்கா தவிர) ஆகிய வட்டாரங்கள் இதில் அடங்கும். தஞ்சாவூர் II பகுதிகளுக்கு அக்ரி கல்ச்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் (AICL) நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் II-ல் பூதலூர், திருவை யாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடை மருதூர், திருப்பனந்தாள் ஆகிய வட்டா ரங்கள் இதில் அடங்கும். 2024 ஆம் ஆண்டில் ராபி சிறப்பு பருவ (சம்பா மற்றும் தாளடி) நெற்பயிருக்கு ஏக்க ருக்கு ரூ.548/- விவசாயிகள் பிரிமியத் தொகையினை செலுத்தி அதிகபட்ச இழப் பீட்டுத் தொகையாக ரூ.36,500/- வரை பெறலாம். இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசா யிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவ சாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூல மாகவோ அல்லது பொது சேவை மையங்கள்  மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு  செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத் துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று, ஆதார்  எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல்,  ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும். ரசீது பெற்றவுடன் விவரங்கள் பதி வேற்றம் செய்யப்பட்டதில் தவறுகள் கண்ட றியப்பட்டால் உடனே விண்ணப்பத்தினை விவசாயிகள் ரத்து செய்து, பின்னர் மீளவும்  புதிதாக சரியான விவரங்களுடன் விண்ணப் பிக்க வேண்டும். ராபி சிறப்பு பருவ சம்பா நெற்பயிருக்கு விண்ணப்பிக்க நவ.15 இறுதி நாள். அதற்கு  முன்னதாகவே கிராம நிர்வாக அலுவல ரிடம் விதைப்புச் சான்று / அடங்கல் சான்றி தழ் பெற்று பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

ஆன்-லைன் வர்த்தக மோசடி: இளைஞர் கைது

அரியலூர், நவ,10- அரியலூர் நகரத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (43). கைப்பேசி, முகநூல், டெலிகிராம் மூலம் இவரை தொடர்புக் கொண்ட நபர்,  லிங்கை அனுப்பி போரேக்ஸ் டிரேடிங்-இல் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறி வங்கி கணக்கு மூலம் ரூ.19,76,480 முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து சுந்தர் ஆன்-லைன் மூலம் அளித்த புகாரின் அடிப்படையில், அரியலூர் இணையக் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து, குற்ற செயலுக்காக பயன்படுத்திய  வங்கி கணக்குகளில் இருந்த ரூ.8,66,966 முடக்கம் செய்யப்பட்டு வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த சக்திவேல் (36)என்பவர் மோசடியில் ஈடுபட்டிருப்பதும், சக்தி வேலுக்கு கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் வங்கி பண  பரிவர்த்தனை மோசடிக்காக வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இணையக் குற்ற காவல் ஆய்வாளர் கவிதா  தலைமையில் 5 பேர் கொண்ட காவல் துறையினர், சென்னை சென்று அங்கு சக்திவேலை கைது செய்தனர். பின்பு, சனிக்கிழமை அரியலூர் அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சக்திவேலிடமிருந்து 3 கைப்பேசிகள், 9 சிம் கார்டுகள்,  7 காசோலை புத்தகம், 7 ஏடிஎம் கார்டுகள், 7 ஆபீஸ் சீல் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சேதுபாவாசத்திரம் காத்திருப்பு போராட்டம் வெற்றி:  கோரிக்கைகளை நிறைவேற்ற அலுவலர்கள் உறுதி

தஞ்சாவூர், நவ.10 -  மீனவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை, ஏற்கனவே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டதன்படி, நிறைவேற்றாத உள்ளாட்சி நிர்வாகத்தையும், அலுவலர்களையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் கிளை, சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி கிராமத்தினர் சார்பில், சனிக்கிழமை சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார், மூத்த தோழர் வீ.கருப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கேர் காலனி, புதுமனைத் தெரு, அம்பேத்கர் தெரு ஆகிய பகுதிகளுக்கு, கேர் காலனியிலும், ஆண்டிவயல் கிராமத்திற்கென தனியாக நியாய விலைக் கடை அமைத்து தர வேண்டும். சரபேந்திரராஜன் பட்டினம், மல்லிப்பட்டினம் கடைவீதியில் பொதுக்கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஊராட்சியில் தேவையான இடங்களில் சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்ட களத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர், சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகியோர் சிபிஎம் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில், காலை 10 மணிக்கு தொடங்கிய காத்திருப்பு போராட்டம் மாலை 4 மணிக்கு கைவிடப்பட்டது.