அறந்தாங்கி, நவ.8 - புதுக்கோட்டை மாவட் டம் ஆவுடையார்கோவிலில் இருந்து பன்னியூர் கிராமத் திற்கு புதிய வழித்தட பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் புதுக் கோட்டை மண்டலம் சார்பில் புதிய வழித்தட பேருந்து ஆவுடையார்கோவிலில் இருந்து காலை 7. 25 மணிக்கு புறப்பட்டு பன்னியூர் சென்ற டையும். இதேபோன்று பன்னியூரில் இருந்து 7:45 மணிக்கு புறப்பட்டு ஆவுடை யார்கோவில் சென்றடை யும். இப்பகுதி மக்கள் இந்த பேருந்து சேவையை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மெய்யநாதன் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன், அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் இரா.ஆனந்த், அறந்தாங்கி ஒன்றியக் குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், அரசு போக்குவரத்து கழக மண்டல துணை மேலாளர் (வணிகம்) சுரேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் குமரன், அறந்தாங்கி போக்குவரத்து கிளை மேலாளர் மணி வண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.