districts

img

பேருந்து நிலையம் அருகிலேயே மன்னார்குடி உழவர் சந்தை விரிவாக்கப்பட வேண்டும் சிபிஎம் வேண்டுகோள்

மன்னார்குடி, ஏப்.12 - தமிழகத்தின் மிகச்சிறந்த உழவர் சந்தைகளில் ஒன்றாக செயல்படும் மன்னார்குடி உழவர் சந்தை பேருந்து  நிலையம் அருகிலேயே விரிவாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய-நகர குழுக்கள்  மாவட்ட நிர்வாகத்தையும் வேளாண் விற்பனை துறையையும் கேட்டுக் கொண்டுள்ளது.  நகரச் செயலாளர் ஜி.தாயுமான வன், ஒன்றியச் செயலாளர் கே.ஜெய பால் இருவரும் கையெழுத்திட்டு செய்தி யாளர்களுக்கு அனுப்பியுள்ள கூட்ட றிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விற்பவர்கள் வாங்குபவர்கள் இடையே நேரிடையான தொடர்பை உரு வாக்கி, தரகு செலவில்லா நல்ல விலை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்ய வும், தரமான புதிய காய்கறிகள் மலி வான விலையில் மக்களுக்கு கிடைக்க வும், 1999 ஆம் ஆண்டு கலைஞரால் உழவர் சந்தைகள் துவக்கப்பட்டன.  இன்று தமிழகத்தில் உள்ள 179 உழவர் சந்தைகளில், மிகச்சிறந்த முதல்  ஐந்து உழவர் சந்தைகளில் ஒன்றாக டெல்டா மாவட்டமான திருவாரூரில் மன்னார்குடி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள  உழவர் சந்தை இன்றும்  இயங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்க ளில் இது முதன்மை சந்தையாகவும் உள்ளது. இதற்கு மன்னார்குடி பேருந்து  நிலையம் அருகிலேயே உழவர் சந்தை  அமைந்திருப்பதுதான் மிக முக்கிய கார ணமாகும். உழவர் சந்தையில் இணைக்கப்பட் டுள்ள 92 விவசாயிகள், 65 கடைகள் இலவசமாக அரசு போக்குவரத்து கழக  ேருந்துகள் மூலம் சுற்றுவட்டார கிராமங் களிலிருந்து உற்பத்தியாகி வரும்  காய்கறிகள், கீரை வகைகள், பழங்க ளின் வரத்தும், சுற்று வட்டார கிரா மங்களில் இருந்து வந்து கொள்முதல் செய்து திரும்பும் சிறு வணிகர்கள், உழவர் சந்தை ஊழியர்கள், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இவர்களிடையே உருவாகியிருக்கும் வாழ்வியல் நட்புறவு மற்றும் கிராமப் பொருளாதார சங்கிலித்தொடர் மக்க ளின் நல்வாழ்வோடு இணைந்தது. உழவர் சந்தையில் அடிப்படை வசதி கள் குறைபாடு நீடித்து வருவதால், மன்னார்குடி பேருந்து நிலையம் விரி வாக்கப்படும் சமயத்திலேயே, உழவர் சந்தையின் இந்த அடிப்படை வசதிகள், எதிர்கால வளர்ச்சித் தேவைகள் மேற் கொள்ளப்படவும், மீண்டும் உழவர் சந்தை பேருந்து நிலையம் அருகி லேயே புதிய வசதிகளுடன் செயல்பட வேண்டும். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட உழவர் சந்தைகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான மாவட்ட நிர்வா கம், திருவாரூர் மாவட்ட வேளாண் மற்றும் வேளாண் வணிக விற்பனைத் துறை மற்றும் மன்னார்குடி நகர நிர்வா கங்களை தீர்மானங்கள் வாயிலாக கேட்டுக் கொள்வதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது. உழவர் சந்தையில் விவசாயி களுக்கான கழிப்பறை வசதி ஏற்படுத்தி  தர வேண்டும். குடிநீர் வசதி ஏற்படுத்த  வேண்டும். ஆவின் பால் பொருட்கள் மற்றும் கேண்டீன் வசதிகள் வேண்டும். ஐந்து மெட்ரிக் டன்களுக்கு குறையாக குளிர் சேமிப்பு (Cold Storage) வசதியும் அதற்கான தனி கட்டிட வசதி யும் உருவாக்கப்பட வேண்டும். சந்தை யின் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் குறைந்த உயரத்தில் உள்ளன. இவைகள்  கான்கிரீட் மேல் தளங்கள் கொண்ட கட்டி டங்களாக மாற்றப்பட வேண்டும். மன்னார்குடி முதன்மை உழவர் சந்தையில் இப்போது உள்ள இடப்  பற்றாக்குறையை தீர்க்க   விரிவுபடுத்தப் பட வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் 7  உழவர் சந்தைகள் உள்ளன. இச்சந்தைகளின் செயல்பாடுகளை மேம்படுத்த குறிப்பிட்ட கால இடை வெளிகளில் மாவட்ட நிர்வாகம் அந்தந்த  தல நிர்வாகங்கள் மற்றும் வேளாண் விற்பனைத் துறையின் அலுவலர்கள்,  விவசாயிகள் கொண்ட கூட்டு கூட்டங்க ளில் ஆய்வுகள் செய்யப்பட்டு முடிவு கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  முன்னாள் முதல்வர் கலைஞரின் மக்கள் நலத் திட்டமான உழவர் சந்தை களில் மாநிலத்தில் சிறந்த சந்தைகளில் ஒன்றாக பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தை உள்ளது. மன்னார் குடியில் இரண்டு உழவர் சந்தைகள் இருந் தாலும், முதன்மை உழவர் சந்தை  பேருந்து நிலையத்தின் அருகிலேயே  தொடர்ந்து செயல்பட வேண்டும். விவசா யத் துறையில், சந்தைப்படுத்தல் என்பதன் பொருள் விவசாயப் பொருட்க ளின் மதிப்பை பணத்தின் அடிப்படை யில் தீர்மானித்து அதன் பலனை இறுதி  வாடிக்கையாளர்களான மக்களுக்கு வழங்குவதுதான்.  இந்நோக்கம் வெற்றி பெற வேண்டு மெனில், உழவர் சந்தை பொது போக்கு வரத்து துவங்கும் மற்றும் வந்தடையும்  பேருந்து நிலையம் அருகில் இருக்க  வேண்டும். மன்னார்குடி பேருந்து நிலைய விரிவாக்கத்துடன் அதே இடத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிக ளோடு மீண்டும் துவக்கப்பட வேண்டும். இதற்கு உழவர் சந்தைகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான மாவட்ட ஆட்சி யர்  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. (ந.நி)