மன்னார்குடி, ஏப்.15 - டெல்டா மாவட்டங்களில் முதன்மை உழவர் சந்தையாக உள்ள மன்னார்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தையை பேருந்து நிலையம் அருகிலேயே விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்த சந்தை தொடர்ந்து பேருந்து நிலையம் அருகிலேயே செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சித்திரை முதல் நாளன்று நடைபெற்ற இப்பிரச்சாரத்திற்கு நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் தலைமை ஏற்றார். நகர மக்கள் மற்றும் விவசாயிகளிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நகர குழு உறுப்பினர்கள் ஏ.பி.தனுஷ்கோடி, மணிவண்ணன், சிஐடியு தலைவர் ரகுபதி, சிஐடியு இணைப்பு சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.