கடலூர், ஜூன்.2-ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-கடலூர் முதல் நாகபட்டினம் வரை பெட்ரோலிய ரசாயன மண்டலம் துவக்குவதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இத்திட்டம் அமலாக்க இரண்டு மாவட்டங்களில் மட்டும் 74 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். புதியஎண்ணெய் எடுப்புக் கொள்கையை மத்திய,மாநில அரசு அறிமுகபடுத்தி ஒற்றை அனுமதிஎன்கிற பெயரில் கச்சா எண்ணைய் அனுமதியுடன் மீத்தேன், ஷேல்டைட்கேஸ் உள்ளிட்டட அனைத்து வகையான எண்ணைய் மற்றும் எரிவாயு பொருட்களை எடுப்பதற்கு வகை செய்துள்ளது.கடலூர் மாவட்டத்தில், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி, கடலூர் ஆகிய ஒன்றியங்களில் 50 க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இத்திட்டம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பதோடு, குடி தண்ணீரும் பாதிக்கும் நிலை உருவாகும்.எனவே இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு சார்பில் மேற்கண்ட ஒன்றியங்களில் ஜூன் 7, 8 தேதிகளில் மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்து இரண்டு சக்கர வாகனத்தில் பிரச்சாரம் நடைபெறும். இந்தப் பிரச்சார இயக்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் மூசா, கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆர்.ராமச்சந்திரன், வி.உதயகுமார், வி.சுப்புராயன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி மற்றும் ஒன்றியச் செயலாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.