districts

தெற்கு ரயில் பொது மேலாளரிடம் நாகை எம்.பி., கோரிக்கை மனு அளிப்பு

திருவாரூர், நவ.9 - நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பி னர் வை.செல்வராஜ், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்-ஐ, தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நேரில் சந்தித்து  நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவையான ரயில் சேவைகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினரை வரவேற்று,  பொது மேலாளர் ஆர்.என்.சிங், நாடாளு மன்ற உறுப்பினரின் கோரிக்கைகளுக்கு பதில் கூறினார். “டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி ரயில் பாதையை கோடி யக்கரை வரை நீட்டிக்க வேண்டும். சரக்கு  வண்டிகளின் எளிய போக்குவரத்து வசதிக்காக காரைக்கால் - நாகப்பட்டினம் - திருவாரூர் - தஞ்சாவூர் தடத்தையும், திருவா ரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் தடத்தினை யும் இருவழி பாதையாக்கிட வேண்டும். திருவாரூர்-காரைக்குடி தடத்தை விரைந்து மின்மயமாக்க வேண்டும். மேலும், காரைக்காலில் இருந்து திருவா ரூர் வழியாக சென்னைக்கு இரு மார்க்கத்தி லும் விரைவு ரயில் சேவையும், சென்னையி லிருந்து திருவாரூர்-காரைக்குடி வழியாக  இராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்கிடவும்  வேண்டும். அதிகாலையில் வேளாங்கண்ணி யில் இருந்து திருவாரூர், தஞ்சாவூர் வழி யாக மதுரைக்கும், நாகர்கோவிலுக்கும், சென் னையிலிருந்து இராமேஸ்வரத்திற்கும் ரயில்  இயக்க வேண்டும்.  கீழ்வேளூர், நன்னிலம், பேரளம், கொர டாச்சேரி, முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினார். கோரிக்கைகளை பெற்றுக் கொண்ட பொது மேலாளர் கோரிக்கைகளை ஆவன  செய்வதாக உறுதி அளித்தார். சந்திப்பின்போது  தெற்கு ரயில்வே பயணிகள் போக்குவரத்து முதன்மை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.