பாபநாசம், நவ.9 - தஞ்சாவூரில் நடந்த அரசு நிகழ்ச்சி யில், பாபநாசம் எம்.எல்.ஏ ஜவா ஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், காணொலி மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிலையில், இரும்புத்தலை ஊராட்சியில் ரூ.13.50 லட்சத்திலான அங்கன்வாடி கட்டடம், மேல களக்குடி ஊராட்சியில் ரூ.17.15 லட்சத்தி லான ரேஷன் கடை, மேலக் கொருக்குப் பட்டு ஊராட்சியில் ரூ.17.40 லட்சத்தி லான ரேசன் கடை கட்டடம், கீழக்கோ வில்பத்து ஊராட்சியில் ரூ.17.40 லட்சத் திலான ரேசன் கடை கட்டடம், குமி ளக்குடி ஊராட்சியில் ரூ. 17.40 லட்சத்தி லான ரேசன் கடை கட்டடம், கோவத்தக் குடி ஊராட்சியில் ரூ.17.40 லட்சத்தி லான ரேசன் கடை கட்டடம், சூழியக் கோட்டை ஊராட்சியில் ரூ.16.75 லட்சத்திலான அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றை பாபநாசம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா நேரில் சென்று பார்வை யிட்டார். புதிய ரேசன் கடைகளில் பயனாளி களுக்கு ரேசன் பொருள்களை வழங்கி னார். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். இதில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.