புதுக்கோட்டை, நவ.9 - புதுக்கோட்டையை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில், தொழில் முனைவோர்களுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி.ராஜா ஆகியோர் தலைமையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், 25 தொழில் முனைவோர் கள் பங்கேற்றனர். இந்த வளாகத்தில் 101 நிறு வனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, தற்போது 70 நிறுவனங்கள் செயல்பட்டு வரு கின்றன. மீதமுள்ள நிறுவனங்களும் செயல்ப டும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அமைச்சர் கள் அறிவுறுத்தினர். நிறுவனங்களுக்கு தேவையான, மின்வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட கோரிக்கைகள் மீதும் உரிய பரி சீலனை செய்து, நிறைவேற்றிட தொடர் புடைய அலுவலர்களுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர். மாவட்ட ஆட்சியர் மு.அருணா, நாடாளு மன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), வை.முத்துராஜர் (புதுக் கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், துணை மேயர் எம்.லியாகத் அலி, பொது மேலாளர் (சிப்காட்) வி.ஆர்.வீரபத்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.