districts

img

தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு மண்டபம் சீரமைக்கப்படுமா?

தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலே யர்களின் நிறவெறிக்கு எதிராகவும்,  இந்தியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கு எதிராகவும் காந்தியடிகள் 1913 இல் நடத்திய  போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேய அரசின்  அடக்குமுறைக்கு ஆளாகி, சிறைக்கொடு மையை அனுபவித்து நோய்வாய்ப்பட்டு 16 வயதிலேயே இந்தியர்களின் உரிமைக்காக அங்கேயே உயிர்நீத்தவர் தான் தியாகி.தில்லையாடி வள்ளியம்மை.  தனது தாயாரான மங்களத் தம்மாளின் சொந்த ஊரான  தில்லையாடியே வள்ளி யம்மையின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாக இருந்த வள்ளியம்மையிடம் மிகுந்த கவலையோடு ‘வள்ளி யம்மா! நீ. ஜெயிலுக்குச் சென்றதற்காக வருத்தப் படு கிறாயா?” என்று காந்தியடி கள் கேட்டபோது...  சிறுமி வள்ளியம்மையோ, தனது இரு கரங்களையும் குவித்து வணங்கியபடியே, “பாரிஸ்டர் அய்யா வருத்தமா? ஒரு துளியும் இல்லையே! இப்போதும் இன்னொரு தடவை  என்னைக் கைது செய்தாலும் சிறைக்குச் செல்லத் தயார்!” என்று துணிவுடன் கூறினா ராம்...! சாவை எதிர்கொண்டு கிடந்த நிலையிலும் தனது மக்களின் நலனுக்காக, உரிமைக்காக போராட துடித்த தியாகி வள்ளியம்மையின் உயிர்ப்பு மிகுந்த போராட்ட உணர்வுதான் காந்தியடிகளின் போராட்டக் குணத்தை மேலும் மேலும் தீவிரப்படுத்தியது. அடுத்த சில  நாட்களுக்குள்ளாகவே இறந்து போன  வள்ளியம்மையின் நினைவாக, தென்னாப் பிரிக்கா ஜோஹன்னஸ்பர்க்கில் ‘தமிழர்கள் நினைவாலயம்’ ஒன்றை கட்டி 1914 ஜூலை 15  அன்று காந்தியடிகள் அதை  திறந்து வைத்திருக்கிறார்.  

தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915 இல் இந்தியாவிற்கு வந்த  முதல் சுற்றுப்பயணமாக  தில்லை யாடியை தேர்வு செய்து, மே 1 ஆம்  தேதி தில்லையாடிக்கு வந்து  வள்ளியம்மையின் உறவி னர்களை சந்தித்தும், அப்பகுதி கிராம மக்களை சந்தித்தும் உரை யாடி இருக்கிறார் காந்தியடிகள். 1934 இல் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காந்தி ஒருபோதும்,  வள்ளியம்மையை பற்றி பேச தவறமாட்டா ராம். தியாகி.வள்ளியம்மையின் நினைவை  போற்றும் விதமாக, காந்தியடிகள் தில்லையாடி வந்த போது, அவர் அமர்ந்த  இடத்தில் காந்தியடிகள் நினைவாக ஒரு நினைவு தூண் ஒன்றையும் அதற்கு எதிரே  வள்ளியம்மையின் நினைவாக ஒரு மணிமண்ட பத்தையும் கட்டி 1971 இல் திறந்து வைத்தார் அப்போதைய முதல்வர் கலைஞர்.  அந்த நினைவாலயத்தில் காந்தியடி களுக்கு தமிழைக் கற்று தந்த தில்லையாடி வேதியம்பிள்ளைக்கு, காந்தி எழுதிய தமிழில் உள்ள கடிதங்கள், தில்லையாடியிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட வர்கள், மீண்டும் சென்னை வந்த போது எடுத்த  புகைப்படங்கள், காந்தியுடன் அங்கு உறுது ணையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களின் படங்கள், காந்தியடிகளின் இளமைக் கால சிலை, பெரிய அளவிலான வரலாற்று ஓவி யங்கள், புகைப்படம், தென்னாப்பிரிக்கா டர்பன் நகரில் இந்தியர்கள் நடத்திய சாத்வீக போராட்ட புகைப்படம், ட்ரான்ஸ்வால் அணி வகுப்பு போன்ற வரலாற்றை சுமந்து நிற்கும் படங்கள் என ஏராளமானவை இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாமல் காந்தியடிகளின் சிலையில் தலையின்றியும், புகைப்படங்கள், ஓவியங்களெல்லாம் சேத மடைந்தும் காணப்படுகிறது. மணிமண்ட பத்தின் கதவு, ஜன்னல்கள் உடைந்தும், சுவர்கள் விரிசல் அடைந்தும் அதில் மரங்கள் முளைத்தும் பழுதடைந்து உள்ளது.

பல்வேறு  பகுதிகளிலிருந்து இந்த மணிமண்டபத்தை பார்த்துச் செல்ல வரும் சுற்றுலா விரும்பி களின் தேவைக்காக அமைக்கப்பட்ட கழிப்பறை கட்டிடமும் எப்போது இடிந்து தலையில் விழுமோ? என்ற ஆபத்தான நிலை  உள்ளது. சுற்றுச்சுவர்கள் உடைந்து விட்டதால்  இரவு நேரங்களில், இந்த மணிமண்டபம் சமூக  விரோதிகளின் மண்டபமாக மாறி வருகிறது. தியாகி வள்ளியம்மையின் நினைவு தின மான பிப்ரவரி 22 அன்று மட்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்துவிட்டு செல் வதாகவும், அதன்பிறகு கண்டுகொள்வதே இல்லையென அப்பகுதி மக்கள் கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர். காந்தி அமர்ந்த இடத்தில் உள்ள நினைவு  தூணும் கேட்பாரற்று உள்ளது. காந்தியடி களை பற்றி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு “அவர் அமர்ந்த இடம் ஒரு ஆலயம்; அவர்  நடந்த இடம் புண்ணிய பூமி” என குறிப்பிடு வார். ஆனால் காந்தியடிகள் 1915 மே 1  அன்று தில்லையாடி வந்து அங்கு அவர் அமர்ந்த இடத்தில் அமைந்துள்ள நினைவு தூணும்கூட உரிய பராமரிப்பின்றி காணப் படுகிறது.  காந்தி தில்லையாடி வந்த நூற்றாண்டு விழா, ஊராட்சி நிர்வாகம் சார்பில் 2015-ல் அப்போதைய ஊராட்சி தலைவர் நடராஜன் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இரு முறை தொடர்ந்து ஆட்சி செய்த அதிமுக அரசு  மணிமண்டபத்தை சீரமைத்து பாதுகாக்க வில்லை என்றும் கூறுகின்றனர்.   தியாகி தில்லை யாடி வள்ளியம்மை நினைவு மணிமண்டபத்தை  புதிதாக கட்டுவதோடு, அவர் குறித்த கூடுதல் வரலாற்று தகவலை காட்சிப்படுத்திடவும், காந்தியடிகள்-தில்லையாடி வருகையையும் வரலாற்று பதிவாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  காந்தியடிகளை கொண்டாடும் இந்த வேளையில், அவரின் போராட்ட உணர்வை அதிகப்படுத்திய தியாகி வள்ளியம்மையின் நினைவு மண்டபத்தையும் பாதுகாத்து பரா மரிக்க நடவடிக்கை எடுத்தால் நல்லது. - செ.ஜான்சன்