districts

திருக்கடையூர் கோவிலில் மார்ச் 27 மகா கும்பாபிஷேகம் பாதுகாப்பு நடவடிக்கைகள்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

மயிலாடுதுறை,  மார்ச் 19 - மயிலாடுதுறை மாவட் டம் திருக்கடையூர் அமிர்த கடேஸ்வர சுவாமி தேவஸ் தான திருக்கோவிலுக்கு, 27.3.2022 அன்று நடைபெற வுள்ள மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை (மார்ச் 19) கோவிலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், மார்ச் 27 அன்று திருக்கடை யூர் கோவிலில் நடைபெற்ற  உள்ள மகா கும்பாபி ஷேக விழாவில் அனைத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். காவல்துறை யினர் பக்தர்களின் பாது காப்பினை உறுதி செய்து, சிரமமின்றி வழிபாடு மேற் கொள்ள வழிவகை செய்ய வேண்டும். பொதுமக்கள் வரிசையில் வருவதற்கும், முகக் கவசங்களை அணிந்து  வருவதற்கும் அறிவுறுத்த வேண்டும். சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை சார்பாக கோவில் வளாகத்தில் மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும். உணவு  பாதுகாப்பு துறை சார்பாக  பக்தர்களுக்கு வழங்கப்ப டும் அன்னதான உணவு கள் குறித்து ஆய்வு மேற் கொள்ள வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி  துறை சார்பாக சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வழங்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும், தற்காலிக கழிப் பிட வசதிகளை அமைக்க வேண்டும். குப்பைகளை அகற்றி பிளிச்சிங்க் பவுடர் தெளிக்க வேண்டும். இந்து சமய அறநிலையதுறை சார்பாக பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என்றார். முன்னதாக மயிலாடு துறை மாவட்டம் திருக்கடை யூர் அமிர்தகடேஸ்வர சுவாமி தேவஸ்தான கோவிலில்  மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு மற்றும் முன் னெச்சரிக்கை நடவடிக்கை கள் தொடர்பான பணிகளை ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.