திருச்சிராப்பள்ளி, ஏப்.22 - திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் அரசு மருத்துவமனையில் கடந்த புதனன்று மருத்துவமனை ஊழி யர் ஆபரேசன் தியேட்டரை சுத்தம் செய்வதற்காக கதவை திறந்த போது உள்ளே அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் மண்ணச்சநல்லூர் ஏரிமிஷன் தெருவை சேர்ந்த சிவபாக்கியம்(50) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கடந்த ஒருவாரத்திற்கு முன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து மருத்துவ ரிடம் மருந்து சீட்டு பெற்றுக்கொண்டு செல்லும்போது, மயக்கம் வரவே ஆப ரேசன் தியேட்டருக்குள் சென்று படுத்துள் ளார். இது தெரியாமல் மருத்துவ மனை ஊழியர்கள் ஆபரேசன் தியேட்டரை பூட்டிவிட்டு சென்று விட்ட னர். வாரந்தோறும் புதன்கிழமை மட்டுமே ஆபரேசன் தியேட்டர் திறக்கப் படுவதால், கடந்த புதனன்று திறந்து பார்த்தபோது, சிவபாக்கியம் சடல மாக அழுகிய நிலையில் கிடந்தது தெரிந் தது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனை ஆப ரேசன் தியேட்டரில் ஒரு வாரமாக பெண் ஒருவர் சடலமாக அழுகிய நிலையில் கிடந்ததை கண்டித்தும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். கவனக்குறைவாக இருந்த மருத்து வமனை நிர்வாகத்தின் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியக் குழு சார்பில் வெள்ளியன்று அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலா ளர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் பூமாலை, சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், விவசாயிகள் சங்க முருகேசன், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.ஜி.ரவிச்சந்திரன், ஆட்டோ சங்க தலைவர் தண்டபாணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். பின்னர் இதுகுறித்து மண்ணச்ச நல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமா ரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அவர், மருத்துவ மனையில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தார்.