திருச்சிராப்பள்ளி, மே 4 - பொதுத்துறை நிறுவன மான எல்ஐசியின் பங்கு களை விற்று நிதி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள் ளது. இதையடுத்து புதன் கிழமை முதல் எல்ஐசி பங்கு கள் விற்பனை தொடங்கு வதைக் கண்டித்து, நாடு முழு வதும் எல்.ஐ.சி ஊழியர்கள் புதன்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தம் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 வரை நடைபெற்றது. திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள எல்.ஐ.சி அலுவலக வளாகத்திற்கு முன் எல்.ஐ.சி ஊழியர்கள் 2 மணி நேர வேலை நிறுத்த விளக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜோன்ஸ் தலைமை வகித்தார். இதில் ஏராளமான எல்ஐசி ஊழியர் கள் கலந்து கொண்டனர். மேலும் ஒத்தக்கடை கிளை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை வகித் தார். திருச்சி மாவட்டத்தில் 9 கிளைகளில் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் எல்ஐசி கிளையில் பணிபுரியும் ஊழி யர்கள் அலுவலகத்தி லிருந்து வெளிநடப்பு செய்தனர். அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க நாகை கிளைத் தலைவர் வி. மதியழகன் தலைமை வகித் தார். நாகப்பட்டினம் தொழிற் சங்க கூட்டமைப்பு தலைவர் சு.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு, காப்பீடு கழக ஊழி யர் சங்க தஞ்சாவூர் கோட்ட பொதுச் செயலாளர் வ.சேது ராமன் தலைமை வகித்தார். கோட்ட இணைச் செயலா ளர் சரவண பாஸ்கர் கண்டன உரையாற்றினார். காப்பீட் டுக் கழக ஓய்வூதியர் சங்க கோட்ட செயலாளர் ஆர்.புண்ணியமூர்த்தி, கோட்ட துணைத் தலைவர் ஸ்ரீதர், கோட்டப் பொருளாளர் ரவி சங்கர் உள்ளிட்ட ஊழி யர்கள், ஓய்வூதியர் சங்கத் தினர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை எல்ஐசி அலுவலகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்தம், ஆர்ப்பாட் டத்திற்கு, கிளைத் தலைவர் வி.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். லிகாய் தமிழ் மாநில செயலாளர் ஏ. பூவலிங்கம் ஆர்ப்பாட் டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.