பெரம்பலூர், ஜூலை 5 -
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பையின் பயன் பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப் பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் புதனன்று நடைபெற்ற ஓட்டத்தை மாவட்ட ஆட்சி யர் க.கற்பகம், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை யில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தன லட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வரை சென்றது.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பயன்பாட்டினை முற்றி லும் ஒழிக்க வேண்டும் என்ற முனைப் போடு பொதுமக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான “மீண்டும் மஞ்சப்பை” இயக்கம் முக்கி யத்துவம் வாய்ந்ததாக கருதப்படு கிறது.
இந்நிகழ்வில் தடகள வீரர் வீராங்க னைகள், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கோட்டப் பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் பிரேம்குமார், தன லட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.