districts

img

மயிலாடுதுறையில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு

மயிலாடுதுறை, நவ.13 - மயிலாடுதுறை மாவட்டத்தில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் எஸ்.காந்திராஜன் தலைமை யிலானக் குழு நேரில் ஆய்வு செய்தனர்.  மயிலாடுதுறை வட்டாரத்திற்குட்பட்ட அய்யன்குளம், நீடூர், சீர்காழியில் புதிய பேருந்து நிலையம்,  சூரைக்காடு பகுதி யில் பூண்டியாங்குப்பம் சட்டநாதபுரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணி கள், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி, பூம்புகார் சுற்றுலா வளாகம் மேம்படுத்துதல் ஆகிய வற்றை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப் பீட்டு குழு தலைவர் எஸ்.காந்திராஜன் தலை மையிலான குழு நேரில் ஆய்வு செய்தது. தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்  துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர் பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, திருவாடாணை சட்ட மன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார், மாத வரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மயி லாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், வேதாரண்யம் சட்ட மன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் தி.கி.சீனி வாசன், ஆகியோர் உடனிருந்தனர்.