திருவனந்தபுரம், ஜுலை 16-
கேரளாவில் பாஜக அதிகாரத்தில் இருந்த திருவனந்தபுரம் மாவட்டம் கல்லியூர் பஞ்சாயத்தில் இனி எல்டிஎஃப் ஆட்சி செய்யும். சனிக்கிழமை (ஜுலை 15) நடைபெற்ற பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து எல்டிஎப் ஆட்சிக்கு வந்தது.
முன்னாள் தலைவரான பாஜகவின் சந்துகிருஷ்ணா, எல்டிஎப் வேட்பாளர் எம்.சோமசேகரிடம் 11 வாக்குகள் வித்தியா சத்தில் தோல்வியடைந்தார்.
கடந்த மாதம், பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு எதிராக, எல்.டி.எப்., கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அறுதிப் பெரும் பான்மை இல்லாவிட்டாலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது.
இருபத்தொரு உறுப்பி னர்களைக் கொண்ட பஞ்சாயத்தில் பாஜக - 10, எல்டிஎஃப் - 9, காங்கிரஸ் - 2 ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. பஞ்சாயத்து தலைவர் சாந்துகிருஷ்ணாவுக்கு எதிராக எம்.சோமசேகரன் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்பதுக்கு எதிராக பதினொன்று என 2 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப் பட்டது. பாஜக உறுப்பினர் சுதர்மா, காங்கிரஸ் உறுப்பினர் சாந்திமதி ஆகியோர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.