பெரம்பலூர், டிச.5 - தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்கத்தின் பேரவைக் கூட்டம் பெரம்பலூரில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் எஸ்.எஸ்.சுப்ரமணியன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களை இந்த அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். மின் இணைப்பு வழங்குவதில் மின் வழங்கும் ஆய்வு உரிமை பெற்றவர்கள், வயரிங் பணியாளர்கள், மின் இணைப்பு பொருள் விற்பனை கூடத்தில் பணியாற்றுபவர்கள், ஒளி-ஒலி அமைப்பாளர்கள் சமுதாயத்தில் ஆற்றும் பணியின் முக்கியத்துவத்தை விளக்கினார். மின் வழங்கு ஆய்வு உரிமம் பெற்றவர்களின் பணியை நீர்த்து போகுமாறு வாரியம் வழங்கிய உத்தரவில் மாற்றத்தை உருவாக்குவது, ஆய்வு உரிமம் வழங்குவதை சுலபமாக்குவது போன்ற பணிகளை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். சங்க நிர்வாகி டி.கே.சம்பத்ராவ் வாழ்த்திப் பேசினார். முன்னதாக பன்னீர்செல்வம் வரவேற்றார். கே.கண்ணன் நன்றி கூறினார். புதிய கிளைத் தலைவராக எம்.பன்னீர்செல்வம், செயலாளராக ஏ.சின்னசாமி, பொருளாளராக எஸ்.சுதாகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.