கும்பகோணம், மார்ச் 7- நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சி 17 ஆவது வார்டில் வெற்றி பெற்ற சரவணன் மேய ராக பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறு கையில், என்னை கும்பகோணம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மாவட்டத் தலைவர் டி.ஆர். லோகநாதன் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சியி னருக்கும், என்னை கும்பகோணம் மாநக ராட்சி மேயராக தேர்வு செய்த மாமன்ற உறுப் பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் கும்பகோணம் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக உரு வாக்கப்படும். கோயில் நகரமான கும்பகோ ணத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்ப டும். பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றார். கும்பகோணத்தின் முதல் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சரவணன், கும்பகோணம் துக்காம்பாளைய தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவ ருக்கு தேவி என்ற மனைவியும், சக்தி, சிவா கணேஷ்பாலாஜி ஆகிய 3 மகன்களும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக கும்ப கோணம் நகர காங்கிரஸ் துணைத் தலை வராக உள்ள சரவணன், சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். கும்பகோணம் லீலா வதி ஆட்டோ தொழிலாளர் சங்கத்திலும் உறுப் பினராக உள்ளார். ஆட்டோ தொழிலாளர்களுக் கான உரிமைகளுக்காக நடைபெற்ற பல போராட்டங்களில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.