districts

img

திறனாய்வுத் தேர்வில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அறந்தாங்கி, நவ.8 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்.யோகேஷ்நீலகண்டன், சி.முத்துமதி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வில்-2024 தேர்ச்சி பெற்றனர். இதனால், மேல்நிலை முதலாமாண்டு முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000 வீதம் ஒரு கல்வி ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன்  பள்ளிக்குச் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார். இந்நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.