திருச்சிராப்பள்ளி, ஏப்.27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் தளுகை பாதர்பேட்டையில் பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் வெங்கடேசன் என்பவர் நிலத்தில் திடீரென துறையூர் வனத்துறை அலுவ லர்கள் நடத்திய சோதனையில் 24.6 கிலோ சந்தன கட்டைகள் பதுக்கி வைத்திருந் தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நில உரிமையாளர் வெங்கடேசனி டம் விசாரணை செய்த வனக்காவல் துறையினர், அவரது மூத்த சகோதரர் மற்றும் மாயம், மந்திரம் நடத்தும் மாயா லயத்தின் மேலாளர் மதுரையை சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை விசார ணைக்கு அழைத்து சென்று, வெங்கடே சனின் சகோதரரை விடுவித்து மற்ற இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. அவர்களுக்கு ரூ.50,000 அப ராதம் விதித்து, அதனை பெற்றுக் கொண்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை நீதிமன்ற காவ லுக்கு அனுப்பாததும் சந்தன கட்டைகள் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை செய்யவில்லை. மரங்கள் எங்கே வெட்டப் பட்டது, யாருக்காக யார் யார் வெட்டி னார்கள். எவ்வளவு காலமாக இந்த கடத்தல் நடைபெறுகிறது. இந்த சந்தன கட்டைகள் எங்கிருந்து கடத்தப்படு கின்றன உள்ளிட்ட எந்தவொரு புலன் விசாரணையுமின்றி குற்றம் சாட்டப்பட்ட வர்களிடத்தில் அபராதம் மட்டும் பெற்றுக் கொண்டு அவர்களை விடுவித் திருப்பது வலுவான சந்தேகத்திற்குரியது.
த.பாதர்பேட்டை எல்லை அருகே மாயாலயம் என்ற பெயரில் அரசு நிலங் களையும் வன நிலத்தையும் மலை புறம் போக்கையும் வளைத்து போட்டு மாயம் மத்திரம் செய்யும் போலி சாமியா ரின் மடாலயத்தை அப்புறப்படுத்தக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடந்த வாரம் நாமக்கல் ஆட்சியர் அலு வலகம் முன்பு காத்திருக்கும் போராட் டம் நடத்தியது. போராட்டத்தில் வருவாய் கோட்டாட் சியர், மாவட்ட கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் உறுதியளித்தபடி மடாலயம் சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட மடாலயத்திலிருந்து சாக்கு மூட்டை களில் பொருட்களை தூக்கி சென்றதை அப்பகுதி விவசாயிகள் பார்த்ததைத் தொடர்ந்து, வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு கடத்தல் சம்பவம் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மாயால யத்தின் மேலாளருடன் மடத்தை நடத்தும் போலிச் சாமியார் மீதும் அவரு டைய கூட்டாளிகளையும் விசாரணை செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது. கடத்தல் கும்பலை தப்பிக்கவிடவே அப ராதம் விதித்ததோடு வனத்துறை முடித்து கொண்டது. இது முழுமை யான, நேர்மையான, சட்டப்பூர்வமான விசாரணை இல்லை. எனவே வனப்பகு தியில் கண்டறியப்பட்ட சந்தன கட்டை கள் கடத்தல் குறித்து சிபிசிஐடி விசார ணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.