districts

வீடு, குடிநீர் வரி கட்டினால்தான் நூறு நாள் வேலையா? மாதர் சங்க காத்திருப்பு போராட்டத்தால் தீர்வு

திருச்சிராப்பள்ளி, ஏப்.27 - திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா எல். மருதூர் ஊராட்சியில் வீட்டு வரி, குடிநீர்வரி கட்டினால் தான் நூறு நாள் வேலை அட்டை மற்றும் வேலை என கட்டாயப்படுத்திய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், நிபந்த னையின்றி மாதம் முழுவதும் நூறு நாள்  வேலை வழங்க வேண்டும். தெரு விளக்கு களை முறையாக பராமரிக்க வேண்டும். தொகுப்பு வீடுகளுக்கு உரிய காசோலையை  உடனே வழங்க வேண்டும்.  நேருநகர் பகுதியில் பழுதடைந்த நவரான்  வாய்க்கால் பாலத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். குடிநீர் பிரச்சனைக்கு  தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம் தலைமையில் அப்பகுதி பொது மக்கள் எல்.மருதூர் ஊராட்சி அலுவலகம் முன்பு செவ்வாயன்று காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர்.  போராட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய தலைவர் விசாலாட்சி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சங்க மாவட்ட தலைவர் லிங்கராணி, ஒன்றிய செயலாளர் கோமதி, பொருளாளர் மெர்ஸி, சிபிஎம் லால்குடி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் பேசினர். பின்னர் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில், உடனடியாக நூறு நாள்  வேலை அட்டை வழங்கப்பட்டது. வியாழக் கிழமை முதல் நூறு நாள் வேலை மாதம் முழு வதும் வழங்குவது. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது என முடிவானது. இதையடுத்து  காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.