districts

img

சாஸ்த்ரா பல்கலை.யில் சர்வதேச எண் கணித மாநாடு

கும்பகோணம்,  டிச.20 - கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழக ஸ்ரீநிவாச ராமானுஜன் மையத்தில், இருபதாவது சர்வதேச எண்  கணித மாநாடு டிச.20 அன்று  துவங்கியது. மூன்று நாட்கள் நடை பெறும் இந்த மாநாட்டினை, அமெரிக்க புளோரிடா பல்கலை பேராசிரியர் கிருஷ்ணசாமி அல்லாடி, இந்த ஆண்டுக்கான சாஸ்த்ரா  ராமானுஜன் விருது பெறும் ஜார்ஜியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் அலெக் சாண்டர் டண், தஞ்சாவூர் சாஸ்த்ரா கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் புல தலைவர் உமாமகேஸ்வரி, கும்பகோணம் புல தலை வர் ராமசாமி, கணிதத் துறை  பேராசிரியர் நரசிம்மன் ஆகி யோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். முன்னதாக முனைவர் உமாமகேஸ்வரி இந்த சர்வ தேச கருத்தரங்கம், இளை ஞர் மத்தியில் ஏற்படுத்தி யுள்ள ராமானுஜன் ‘எண்ணி யல் கோட்பாடு’ தாக்கம் பற்றி விளக்கினார். இந்த கருத்தரங்கில் தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரியா, இந்தியாவின் ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவன பேராசிரியர்கள், பங்கேற்று தங்கள் எண்ணியல் கோட்பாடு தொடர்புள்ள ஆராய்ச்சி  படைப்புகள் குறித்து விளக்குகின்றனர்.