திருச்சிராப்பள்ளி, மே 14 - தமிழகத்தில் சமீப காலமாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் சமீபத்தில் எந்தவொரு தொற்றாளரும் இல்லாத நிலையும் இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதார துறையினர் தெரிவித்தனர். இந்த மாநகராட்சியில் 18 வயதுக்கு மேல் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியாக 7,14,997 பேர் இருக்கின்றனர். இவர்களில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 92 சதவீதம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 77 சதவீதம் பேர் 2 ஆவது தவணைத் தடுப்பூசியும் எடுத்துக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பவர்களிடம், மாநகராட்சி மொபைல் குழுவினர் தொடர்பு கொண்டு பேசி வரு கின்றனர். இதன் காரணமாக தற்போது தினசரி 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
பேராவூரணி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாட்டு நலப்பணித் திட்டம், இளை யோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராஜன் தலைமை வகித்தார். அழகியநாயகிபுரம் வட்டார மருத்துவ அலு வலர் ராமலிங்கம் மேற்பார்வையில், மருத்துவக் குழுவினர் முதல் தவணை தடுப்பூசி 147 பேருக்கும், 2 ஆம் தவணை தடுப்பூசி 58 பேருக்கும் என மாணவர்களுக்கு செலுத்தி னர்.