மயிலாடுதுறை, ஜூன் 29 - மயிலாடுதுறையில் தமிழ் நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத் தின் மாவட்ட மாநாடு சங்கத் தின் மாவட்ட தலைவர் வ. பழனிவேலு தலைமையில் நடைபெற்றது. சங்க கொடி யினை மாநிலப் பொருளா ளர் என்.ஜெயச்சந்திரன் ஏற்றி வைத்தார். மாநாட் டினை து.கணேசன் துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவராக சா.ஜெகதீசன், மாவட்டச் செயலாளராக வ.பழனி வேலு, மாவட்டப் பொருளா ளராக இரா.இராதா கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர்களாக வெ.ஜெயக்குமார், சு.இராம பத்திரன், சு.கருணாநிதி, வை.நாகராஜன், மாவட்ட இணைச் செயலாளர்களாக க.சரவணன், த.திருஞான சம்பந்தம், த.ராயர் மற்றும் பி.வேம்பு, மாநில செயற் குழு உறுப்பினர்களாக கோ. குணசேகரன், எல்.பிரேம் சந்திரன், தணிக்கையாளர் களாக சா.திருமாறன், ஜெ. சுந்தரவள்ளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல் படுத்திட வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன் வாடி, ஊராட்சி செயலாளர் களுக்கு குறைந்தபட்ச ஓய்வூ தியமாக ரூ.8750 வழங்க வேண்டும். மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 1.1. 2022 முதல் 3 சதவிகிதம் அக விலைப்படி வழங்கியது போல, மாநில அரசு 1.1.2022 முதல் அகவிலைப்படி வழங்க வேண்டும். அக்னி பாதை திட்ட வேலை நிய மன உத்தரவை வாபஸ் பெற வேண்டும். மருத்துவ காப்பீட் டுத் திட்டத்தில் மருத்துவ மனைகளில் பணம் செலுத் தாமல் இருக்கும் வகையில் விதிமுறைகளை வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.