கும்பகோணம், நவ.9 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைமையகத்தில் முப்பெரும் அரசு நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, திருபுவனம் நெசவா ளர்களால் தயார் செய்யப்பட்ட புதிய பட்டு புடவை டிசைன்களை அறிமுகப் படுத்தினார். மேலும் ரூ.51.70 லட்சத்தில் நிறுவப்பட்ட பட்டுப் புடவைகளுக்கு சாயம் ஏற்றும் பாய்லர் இயந்திரங் களை வழங்கி விழாவை துவக்கி வைத்தார். கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.27 லட்சத்தில் 33 அங்கத்தினர்களுக்கு முத்ரா கடன் வழங்கியும், ரூ.5.90 லட்சத் தில் 32 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியமும், ரூ.18 லட்சத்தில் 13 பய னாளிகளுக்கு நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் நிதி வழங்கியும் உரையாற்றினார். அப்போது அமைச்சர் காந்தி பேசு கையில், “கொரோனா காலத்தில் நெச வாளர்களுக்கு வழங்கிய சுமார் ரூ.48 லட்சம் முன்பணத்தை அங்கத்தினர் களின் மேம்பாட்டு நிதியிலிருந்து ஈடு செய்து முன்பணம் ரூ.48 லட்சத்தை தள்ளுபடி செய்கிறோம். மழைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கக்கூடிய உதவித்தொகை போல் நெசவாளர்களுக்கும் உதவித்தொகை வழங்கவும், இந்த திகோ சில்க்ஸ் சங்கத்தில் விற்பனை ஆகாமல் தேங்கி யுள்ள ரூ.104 கோடி மதிப்பிலான பட்டுப் புடவைகளுக்கு அரசு மானிய மாக 25 சதவீதம் வழங்க வேண்டும் என திகோ சில்க்ஸ் பாதுகாப்பு ஒருங்கி ணைப்புக் குழு கோரிக்கை வைத்தது. இதனை பரிசீலித்து உடனே அதிகாரி கள் மற்றும் முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக, நெசவாளர்களின் கோரிக்கையை முன்வைத்து முழு முயற்சியுடன் 40 சதவீத போனஸ் வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கும் கைத்தறித் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சரும் திருவிடைமருதூர் சட்ட மன்ற உறுப்பினருமான கோவி.செழி யன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யா ணசுந்தரம், கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கும்பகோணம் மாநகர துணைமேயர் சுப.தமிழழகன், கைத்தறித்துறை கூடுதல் இயக்குநர் தமிழரசி ஆகி யோர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் செயலாட்சி யர் கிரிதரன் வரவேற்றார். கும்பகோ ணம் சரக உதவி இயக்குநர் காமராஜ் நன்றி தெரிவித்தார்.