districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவையொட்டி, திருச்சி வெண்மணி இல்லத்தில் ஞாயிறன்று அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் அவரது உருவப்படத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், பகுதிக் கழகச் செயலாளர் மோகன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், லெனின், மாவட்டக் குழு உறுப்பினர் சந்தானம் உள்பட பலர் உடனிருந்தனர்.