districts

img

கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்க வேண்டும் உலக கைம்பெண்கள் தின மாநாடு வலியுறுத்தல்

மயிலாடுதுறை, ஜூலை 2 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உலக கைம்பெண்கள் தின மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. விதவைப் பெண்கள் வாழ்வுரி மைச் சங்கத்தின் தலைவர் ப.கஸ்தூரி தலைமை யில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர் களை திலகம் விதவைப் பெண்கள் நலவாழ்வு சங்கத்தின் ரா.ராதா வரவேற்று பேசினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் மாநிலத் துணைத் தலைவர் ஜி.கலைச் செல்வி, பூம்புகார் கல்லூரியின் தமிழ்த்துறை  உதவி பேராசிரியர் முனைவர் நா.சாந்தகுமாரி, வழக்கறிஞர் ஆ.தியாகராஜன், விதவைப்  பெண்கள் மேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பா ளர் (கலங்கரை) ச.ஜெசி, விதவை பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் த.ஜான்சிராணி உள்ளிட் டோர் சிறப்புரையாற்றினர்.  மாநாட்டிற்கு முன்னதாக 50-க்கும்  மேற்பட்ட கைம்பெண்கள் “பூ” பொட்டு வைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. 40 லட்சத் திற்கும் மேல் உள்ள கைம்பெண்களுக்கு தமிழக  அரசு நலத்துறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அரசு நிதி உதவி மூலம் வீடு கட்டும் திட்டங்க ளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.  அரசுத் துறைகளில் மட்டுமல்லாது தனி யார் துறைகளிலும் கைம்பெண்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கைம்பெண்களின் வாழ்வுநிலை குறித்த மாநி லம் தழுவிய புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டு அதனடிப்படையில் பல்வேறு நிலைகளிலும் அவர்களின் வாழ்வு மேம்பட நிதி ஒதுக்கீடும், வளர்ச்சி திட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.