கும்பகோணம், ஜூலை 19- கும்பகோணத்திலிருந்து கோ வைக்கு போதை மாத்திரைகளை விநி யோகம் செய்த வியாபாரியை போலீ சார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் மேலக்காவேரி வடக்கு குடியான தெருவில் வசிப்பவர் முகமது பஷீர் (48). இவர் தஞ்சை சாலையில் உள்ள ஹாஜியார் தெருவில் சிரின் இங்கிலீஷ் பார்மஸி நடத்தி வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விநியோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம், ஈச்சனேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும், இராமநாதபுரத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களுடன் வாட்ஸ் அப் மூலம் தொடர்பில் இருந்து, கடந்த ஒரு வருடமாக போதை மாத்திரை களை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த போதை மாத்திரைகளை எடுத்துக் கொண்ட இரண்டு மாணவர்க ளில் ஒருவர், கடந்த ஜுலை 13 ஆம் தேதி திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பியபோது, கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்ட தாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது உடலை உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த உடற்கூராய்வு அறிக்கை யில், நரம்பு வழியாக போதை மருந்து எடுத்துக் கொண்டதில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதயம் செயலிழந் துள்ளது. இதனால்தான் அந்த மாணவர் உயிரிழந்தார் என தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மாணவர் களின் வங்கிக் கணக்கில் இருந்து முகமது பஷீர் வங்கி கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்ததும், வாட்ஸ் அப் மூலம் தகவல் பரிமாறி, கொரியர் மூலம் பார்சலில் போதை மாத்திரைகளை விநி யோகம் செய்ததும் கண்டுபிடிக்கப் பட்டது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாண வர்களை குறிவைத்து போதை மாத்தி ரைகளை விநியோகம் செய்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் கும்பகோணத்தில் இயங்கி வரும் முகமது பஷீரின் பார்மசி யில் கோவை தனிப்படை போலீசாரால் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவரை கோவைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், குற்றம் உறுதி செய்யப்பட்டதன் பேரில், முகமது பஷீரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.