districts

ஸ்ரீரங்கம் கோவிலில் முதலுதவி மருத்துவ மையம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி, ஏப்.24 - பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இங்கு  ஆண்டு முழுவதும் பல்வேறு  திருவிழாக்கள் நடைபெ றும். இக்கோவில் ஆன்மிகம்  மற்றும் சுற்றுலா தலமாக  விளங்குகிறது. இதனால் வெளிநாடுகள், வெளிமாநி லங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தின மும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர். இந்நிலையில் கோவி லுக்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட் டால் அவர்களுக்கு உடனடி யாக சிகிச்சை அளிப்பதற் காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத் தில் உள்ள சந்திரபுஷ்கரணி அருகில் ரூ.7 லட்சம் மதிப்பில்  முதலுதவி மருத்துவ மையம்  அமைக்கப்பட்டது. இந்த முதலுதவி மருத்துவ மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு  பணியாற்ற உள்ள மருத்து வர்கள் மற்றும் செவிலி யர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனி யாண்டி, இந்துசமய அற நிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், கோவில் உதவிஆணையர் கந்தசாமி, தலைமை அர்ச்ச கர் சுந்தர்பட்டர் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.