districts

திருச்சி முக்கிய செய்திகள்

பேராவூரணி தொகுதியில் வெள்ள பாதிப்பு குடும்பங்களுக்கு  நிதியுதவி.

பேராவூரணி, நவ.30- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தொகுதியில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் நிதியுதவி வழங்கினார். சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்த நாடு ஊராட்சி அம்பேத்கர் தெருவில் வசிக்கும்  பவளக்கொடி (70) உள்ளிட்ட 16 குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.80,000 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாகூர் கந்தூரி விழாவுக்கு  100 சிறப்புப் பேருந்துகள்

நாகப்பட்டினம், நவ.30- நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி டிசம்பர் 1 முதல் 12 வரை கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் சார்பில்  100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி அறிவித்துள்ளார். தற்போ துள்ள 127 பேருந்துகளுடன் கூடுதலாக இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளா

அதிமுக ஆட்சிக்கால  வழக்கிலிருந்து திமுகவினர் விடுதலை

தஞ்சாவூர், நவ.30- கும்பகோணம் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018-இல் அப்போதைய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் மீதான வழக்கை நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. வழக்கறிஞர்கள் லோ. காஸ்பரோவ், ஆனந்த், சேங்கனூர் ரவிச்சந்திரன், ஸ்டா லின் ஆகியோர் வாதாடிய இவ்வழக்கில் திமுக நிர்வாகி கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மெலட்டூர் அருகே  ரூ.5 லட்சத்தில் தார்ச்சாலை

பாபநாசம், நவ.30- பாபநாசம் அருகே மெலட்டூர் கொத்தங்குடி ஊராட்சி  சாத்தனூரில் மாவட்டக் கவுன்சிலர் நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடை பெற்றது. இப்பணிகளை ஊராட்சித் தலைவர் பழனி, மாவட்டக் கவுன்சிலர் ராதிகா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

விவசாயிகள் குறைதீர்  கூட்டம்

பெரம்பலூர், நவ.30- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கரும்பு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் எனவும், வெங்காய திருகல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சி யர் உறுதியளித்தார். மேலும், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ்  பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மின்மோட்டார்,  கருவிகள் மானியத்தில் வழங்கல்

மயிலாடுதுறை, நவ.30- மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்  பொறியியல் துறை சார்பில் திறன்மிக்க மின்மோட்டார் கள் மற்றும் கைப்பேசி மூலம் இயக்கக்கூடிய தானி யங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. மின்மோட்டார்களுக்கு 50% அல்லது ரூ.15,000 வரை மானியமும், கட்டுப்பாட்டு கருவி களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 50% (அதிகபட்சம் ரூ.7,000) மற்றும் பிற விவசாயிகளுக்கு 40% (அதிக பட்சம் ரூ.5,000) மானியமும் வழங்கப்படுகிறது. பயன்பெற  விரும்பும் விவசாயிகள் வட்டார உதவிப் பொறியா ளர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி யர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் பாதிப்பு: பாதுகாப்பு குறித்து ஆட்சியர் அறிவுரை

திருச்சிராப்பள்ளி, நவ.30- திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வடகிழக்கு பருவமழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு களில் இருந்து தற்காத்துக்கொள்ள முக்கிய வழிகாட்டு தல்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக டெங்கு, சிக்குன்குன்யா, லெப்டோஸ்பைரோசிஸ் போன்ற நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வீடுகளில் தேங்கும் நீரை அகற்றுதல், கொதிக்க வைத்த குடி நீரை பருகுதல், நோய் அறிகுறிகள் தென்பட்டால் உட னடியாக மருத்துவமனையை அணுகுதல் போன்ற முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

தமிழ்ப் பல்கலை.யில்  தொல்லியல் கருத்தரங்கம்

தஞ்சாவூர், நவ.30- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார்  வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் அண்மைக் கால கண்டுபிடிப்புகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. துணைவேந்தர் (பொ) க.சங்கர் தலைமை யில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழக தொல்லியல் துறை அலுவலர் த.தங்கதுரை பொற்பனைக்கோட்டை அகழாய்வு குறித்தும், பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் கங்கைகொண்ட சோழபுரம் குறித்தும் சிறப்புரை நிகழ்த்தினர்.

இளந்தளிர் குழந்தைகள் திருவிழா

தஞ்சாவூர், நவ.30- தேசிய குழந்தைகள் நாளையொட்டி தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் “இளந்தளிர் 2024” குழந்தைகள் திருவிழா மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் முன்னி லையில் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். புதிய பாரத எழுத்தறிவுத் திட்டப் பயிற்சி புதுக்கோட்டை, நவ.30- மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான இரண்டாம் கட்ட  பயிற்சி நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் அமுதா  தொடங்கி வைத்த இப்பயிற்சியில் எழுத்தறிவு மற்றும் வாழ்க்கைத் திறன்கள் குறித்த விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கடற்கரை கிராமங்களில்  மருத்துவ முகாம் நடத்தக் கோரிக்கை

பேராவூரணி, நவ.30- சேதுபாவாசத்திரம் பகுதி கடற்கரை கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மழை காரணமாக வேலையிழந்துள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், முகத்துவாரங்களை தூர்வார வேண்டும் எனவும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நூலக வார விழா

திருவாரூர், நவ.30- திருவாரூர் மாவட்டம் குடவாசல் கிளை நூலகத்தின் 57-வது தேசிய நூலக  வார விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு வாசகர் வட்டத் துணைத் தலைவர் ஏ.சாமிநாதன் மற்றும்  தலைமை ஆசிரியர் ஜெயவேல் புத்தகப்  பரிசுகள் வழங்கினர்.

ஆலங்குடியில்  மக்கள் தொடர்பு முகாம்

புதுக்கோட்டை, நவ.30- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மாஞ்சான்விடுதியில் டிசம்பர் 11 அன்று  மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. டிசம்பர் 3 முதல் கிராம நிர்வாக அலுவ லகத்தில் முன்மனுக்கள் பெறப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை  வலைதளத்தில் முழுமையாக பதிவு செய்திட வேண்டும் அனைத்து வேலை அளிப்பவர்களுக்கும் அறிவுறுத்தல்

சிவகங்கை, நவ.30-  வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை, பணிக்கு அமர்த்தியுள்ள அனைத்து வேலை அளிப்பவர்களும், வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் முழுமையாக பதிவு செய்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.  சிவகங்கை மாவட்டத்தில் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான தொழில் மற்றும் பிற தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள அனைத்து வேலை அளிப்பவர்களும், வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளி மாநில தொழிலாளர்களுக்கு என தனியாக உருவாக்கப்பட்டுள்ள labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் முழுமையாக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அவர்களது பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ளவும், சட்ட ஒழுங்கினை பாதுகாப்பதற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்காணித்து, தீர்வு காணுவதற்கு சிவகங்கை மாவட்டத்தில், வருவாய்த்துறை, காவல்துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கக துறை ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எனவே, பிற மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு  பணியிடங்களில், ஏதேனும் தங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலோ, குறைகளோ இருப்பின் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் மேலாண்மை பிரிவில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையினை -1077 என்ற இலவச எண்ணிலோ, சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறையினை -155214, 1800 4252 650  ஆகிய இலவச எண்களிலோ, காவல் துறை கட்டுப்பாட்டு அறையினை -100 என்ற இலவச எண்ணிலோ, சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தினை 044 24321438 என்ற தொலைபேசி எண்ணிலோ, சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தினை 04575 240521 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என மாவட்ட  ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

கருஞ்சிறுத்தை நடமாட்டம்

கோவை, நவ.30- சின்னத்தடாகம் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று நட மாடும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள் ளது.  கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை,  ஆனைக்கட்டி, மருதமலை  உள்ளிட்ட பகுதிகளில் காட்டு  விலங்குகள் அதிகம் உள்ளன. குறிப்பாக காப்புக்காடு  பகுதிகளான ஆனைக்கட்டி, மாங்கரை அதனை ஒட்டி யுள்ள தடாகம், சோமையனூர், திருவள்ளுவர் நகர்,  உள்ளிட்ட பகுதிகளில்  சிறுத்தை நடமாட்டமும் அவ்வப்போது தென்படுகிறது. கடந்த 10 நாட்க ளுக்கு முன்பு  திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள  மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் சிறுத்தை இருந்த  செல்போன் வீடியோ காட்சிகள் வைரலானது. இந்நிலையில் வெள்ளியன்று சின்ன தடாகம்-  வீரபாண்டிப்புதூர் செல்லும்வழியில் சரவணன் என்பவரின் வீட்டிற்கு அருகில் கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, வீர பாண்டிபுதூர் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து  வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வனத் துறையினர் கருஞ்சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போக்சோ குற்றவாளிகள் 4 பேருக்கு சிறை ஒருவருக்கு 25 ஆண்டு சிறை

திண்டுக்கல், நவ.30- திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 03 நபர்களின் முதல் குற்றவாளிக்கு   25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,55,000 அபராதமும் இரண்டு மற்றும் மூன்றாம் குற்றவாளிகளுக்கு  22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,50,000 அபராதமும் விதிக்கப்பட்டன. குஜிலியம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆலம்பட்டி பகுதியைச்சேர்ந்த பாண்டி(19) மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த இவரது தந்தை சுப்பிரமணி(62) தாய் காளியம்மாள்(55) ஆகிய 3 நபர்களையும் குஜிலியம்பாறை காவல்துறையினர்  போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இதில் அளித்த தீர்ப்பில், முதல் குற்றவாளியான பாண்டி என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் இரண்டாம் மூன்றாம் குற்றவாளிகளான சுப்பிரமணி மற்றும் இவரது மனைவி காளியம்மாள் ஆகியோருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.150000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதே போல் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை நத்தம் கோமணம் பட்டி  பகுதியைச் சேர்ந்த அஜித்(22) என்பவரை நத்தம் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் வெள்ளியன்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளி அஜீத்திற்கு 13 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் கொலை

திருப்பூர், நவ.30- பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை  சேர்ந்த, தாய் தந்தை, மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வ சிகா மணி (78). இவரது மனைவி அலமேலு (75). இத்தம்பதி யருக்கு ஒரு மகன். ஒரு மகள் உள்ளனர். இருவரும் திரு மணம் ஆகி, மகன் கோவையிலும், மகள் சென்னிமலை யிலும் வசித்து வருகின்றனர். இந்நிலை யில், வெள்ளியன்று நடைபெறும் நிச்சயதார்த்த  விழாவுக்காக, மகன் செந்தில்குமார் வியாழனன்று சேமலை கவுண்டம்பாளையத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில், நிச்சயதார்த்த விழாவுக்கு செல் வதற்காக தெய்வசிகாமணி அந்த ஊரைச் சேர்ந்த  சவரத் தொழிலாளி சக்கரகட்டி என்பவரை அதி காலை வீட்டிற்கு வரச் சொல்லி இருந்தார். வெள்ளி யன்று அதிகாலை சவரத்தொழிலாளி வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் அவிநாசிபாளையம் காவலர்களுக்கு தகவல் அளித்தார். இதைதொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில்  வீட்டில் இருந்த 8 பவுன் நகை காணவில்லை என முதல்  கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தடவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் காவ லர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் சடலங்களும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரதே பரிசோதனைகாக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மேலும், காவல் ஆணையர் லட்சுமி  சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

கல்வராயன் மலை உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர்கள் பாத்திரம் கழுவிய விவகாரம் தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம்

கள்ளக்குறிச்சி, நவ.30 - கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் மலைவாழ் மக்களின் குழந்தை களுக்காக வெள்ளிமலை அருகே உள்ள இன்னாடு கிராமத்தில் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது.  இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இங்கு படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள், விவசாயக் கூலிகளின் குழந்தைகளாகும். பெற்றோர் கோரிக்கை இந்த பள்ளியில், தினமும் காலை உணவு  அருந்திய மாணவர்கள், உணவு சமைத்த பாத்திரங்களை கழுவி வைக்கும் நிலை  நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்த  நிலையில், நவம்பர் 28 ஆம் தேதி தொடக்கப் பள்ளியில் சமையல் பாத்திரங்களை மாணவிகளே கழுவிடும் வீடியோ வெளி யாகிய நிலையில் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர் களை பாத்திரங்கள் கழுவும் பணியில் ஈடு படுத்திய ஆசிரியர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.  பணியிடை நீக்கம் இந்த நிலையில், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் இன்நாடு உண்டு உறைவிட பள்ளியின் தலைமை ஆசிரியர் சபஸ்டின், அப்பள்ளியின் சமையலர் ராதிகா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் ஆய்வுக்கு பிறகும்…. இதுகுறித்து கல்வராயன் மலை பகுதி  மக்கள் கூறுகையில், விவசாய கூலி தொழி லாளர்கள் நிறைந்த கல்வ ராயன் மலைப் பகுதியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு உண்டு உறைவிடப் பள்ளி களை துவக்கியது. ஆனால் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை என்றனர். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கல்வராயன் மலையில் சேராப்பட்டு அருகே உள்ள கிலாக் காடு அரசு தொடக்கப் பள்ளி, சேராப்பட்டு உண்டு உறைவிட மேல் நிலைப்பள்ளி, என்  நாடு உண்டு உறைவிட பள்ளிகளை ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்குப் பிறகும் ஆசிரி யர்கள் மற்றும் ஊழியர்களின் செயல்பாடு களில் முன்னேற்றம் இல்லை. எனவே உண்டு  உறைவிடப் பள்ளிகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று  மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.