தஞ்சாவூர், செப். 10 - கட்டளை மேட்டுக் வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசா யிகள் போராட்டம் நடத்தினர். புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம், தஞ்சாவூர் மாவட்ட ஏரிகளை நிரப்பிட தமிழ்நாடு அரசு உத்தர விட்டது. கடந்த ஆகஸ்ட் 6 அன்று நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போதும் 15 தினங்களில் அனைத்து ஏரிகளையும் நிரப்பித் தருவதாக பொதுப் பணித்துறை அலுவலர்கள் உறுதியளித்தனர். ஆனால் இது வரை பாசனத்திற்கு தண்ணீர் தராத தைக் கண்டித்தும், உடனடியாக பாசனத் திற்கு தண்ணீர் வழங்கவில்லை. எனவே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கட்டளை கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை யில் செங்கிப்பட்டி கட்டளை மேட்டுக் கால்வாயில், தண்ணீர் வரும் வரை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்ப டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விவசாயிகள் கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டக் களத்தில் பாத்தி ரத்தை வைத்து கஞ்சி காய்ச்சினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண் ணன், ஆர். நந்தகுமார் (மதிமுக ), வை. அறிவழகன் (காங்கிரஸ்), எஸ். தமிழ்ச்செல்வி (மாதர் சங்கம்), சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், கிருபா (அமமுக), கே.தமிழரசன், ஊராட்சி மன்றத் தலைவர் கருப் பையா, தமிழ்ச்செல்வன் (வாலிபர் சங்கம்), ஒன்றிய துணைப் பெருந்த லைவர் கோவி.க. சுப்பு, வி.தொ.ச மருத குடி காமராஜ் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு நடத்திய நீர்வள ஆதா ரத்துறை, பொதுப்பணித்துறை அலுவ லர்கள், உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.வி. கண்ணன் உள்ளிட்ட போராட்டக் குழுவினருடன் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். போராட்டக் களத்திற்கு வந்த, தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் ச. முரசொலியும் விவசாயிகளை சந்தித்து, “பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார். இந்நிலையில். செவ்வாய்க் கிழமை மாலையே பாசனத்திற்கு ஓரளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதை யடுத்து காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி புதன்கிழமை தஞ்சையில் விவசாயி கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.