தஞ்சாவூர், நவ. 6- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், கலைத் திருவிழா - நடனப் போட்டிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) வ.மதியழகன் தலைமை வகித்தார். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் க.தனலட்சுமி வர வேற்றார். கலைத் திருவிழா போட்டிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் துவக்கி வைத்து சிறப்பு ரையாற்றினார். இதில் வட்டாட்சியர் இரா.தெய்வானை, வட்டார வளர்ச்சி அலுவலர் மா.சாமிநாதன், ஸ்டார் லயன்ஸ் சங்கத் தலைவர் செ.பன்னீர் செல்வம், வருவாய் ஆய்வாளர் ஜெயதுரை மற்றும் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர். இதில், பேராவூரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் 28 பள்ளிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப் படுத்தினர். நிறைவாக வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் க.ஷாஜிதா பானு நன்றி கூறினார். மாணவர்களின் கலைத்திறனை வெளிக் கொணரும் விதமாகவும், நமது பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடு குறித்து அறிந்து கொள்ளவும், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக இந்த வட்டார அளவிலான கலைத் திரு விழா நடத்தப்படுகிறது. பாபநாசம் தமிழக அரசால் நடத்தப்படும் கலைத் திருவிழா, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது. நவ.5 முதல் 8 வரை நடைபெறும் கலைத் திருவிழாவில் பாபநாசம் வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 9, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, வட்டார வள மைய மேற்பார்வை யாளர் பொறுப்பு முருகன், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த கலைத் திருவிழாவில், தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் நீலகண்டன், கபிஸ்தலம் ஜேக் அண்ட் ஜில் பள்ளி நிர்வாகி மைக்கேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.