தஞ்சாவூர், ஜன.20 - மனு அளித்த சில நிமிடங்களில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய ஆட்சியரின் செயலால் மாற்றுத்திற னாளி ஒருவர் நெகிழ்ச்சி அடைந்தார். தஞ்சாவூரில், திங்களன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்க ஜம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை கள் அடங்கிய 440 மனுக்களை பொது மக்கள் வழங்கினர். அப்போது பட்டுக்கோட்டை பகுதி யைச் சேர்ந்த அய்யாவு என்ற மாற்றுத்திறனாளி தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என ஆட்சியரி டம் மனு அளித்தார். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லர்களை அழைத்துப் பேசிய ஆட்சி யர், மூன்று சக்கர சைக்கிள் தயாராக உள்ளதா என கேட்டார். கைவசம் இருப்பதாக அலுவலர்கள் தெரி விக்கவும், அதனை மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்குக்கு கொண்டு வருமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் மூன்று சக்கர சைக்கிளை அய்யாவுவிடம் மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் முன்னிலையில் ஆட்சி யர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். ஆட்சியரின் உடனடி நடவடிக்கையால் மாற்றுத்திறனாளி அய்யாவு நெகிழ்ந்து கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.