திருப்பூர், பிப். 4 - இந்தியாவின், சாமானிய ஏழை, எளிய மக்கள் மீது வன்மம் நிறைந்த தாக்குதல் தொடுத்து, பெரும் பணக்கா ரர்களைக் கொழுக்க வைக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து திருப் பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஒன்றிய அரசின் பட்ஜெட் மக்கள் மீது நடத்தப்பட்ட குரூரமான தாக்குதல் என்று கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத் துள்ளது. இதன் அடிப்படையில் திருப் பூர் மாவட்டத்தில் பல்வேறு மையங்க ளில் பட்ஜெட் எதிர்ப்புக் கண்டன ஆர்ப் பாட்டங்கள் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று நடத்தப்பட்டன. வடக்கு மாநகரம் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வடக்கு மாநகரக்குழு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு நகரக்குழு உறுப்பினர் பொ. பாலகுமாரன் தலைமை ஏற்றார். மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாந கரச் செயலாளர் பா.சௌந்தராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆர். கணேஷன், ஆர்.மைதிலி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாந கரக்குழு உறுப்பினர்கள், கட்சி அணியி னர் பெருந்திரளானோர் கலந்து கொண் டனர்.
கருவம்பாளையம்
திருப்பூர் தெற்கு மாநகரக் குழு சார் பில் கருவம்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகரக்குழு உறுப்பி னர் பா.ஞானசேகரன் தலைமை ஏற்றார். இதில் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், சிஐடியு மாவட்டத் துணைத்தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.செல்லதுரை, எஸ். பானுமதி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். கருவம்பாளையம் கிளைச் செயலாளர் ஜி.சுரேஷ்குமார் நன்றி கூறி னார்.
வீரபாண்டி
திருப்பூர் தெற்கு ஒன்றியக் குழு சார்பில் வீரபாண்டி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினர் பா.லட்சுமி தலைமை ஏற்றார். இதில் ஒன்றியச் செய லாளர் செ.மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.சண்முகம் ஆகியோர் உரையாற்றினர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.கணே சன் உள்பட ஒன்றியக்குழு உறுப்பினர் கள், கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டனர். தெற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
வாவிபாளையம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு சார்பில் வாவி பாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம். தன்ராஜ் தலைமை ஏற்றார். இதில், ஒன்றி யச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்சீர் அகமது, மாவட்டக்கு குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் என்.இளங் கோ, எஸ்.பானுமதி, டி.மங்கலட்சுமி, பி. மகாலிங்கம் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஒன்றியக்குழு உறுப்பினர் கள், கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்குளி டவுன்
ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில் ஊத்துக்குளி டவுன் பேருந்து நிறுத்தத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாரதிநகர் கிளைச் செயலாளர் விக் னேஸ்வரன் தலைமை ஏற்றார். தாலுகா குழு உறுப்பினர்கள் வி.காமராஜ், கை. குழந்தைசாமி, முன்னாள் தாலுகா செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். தாலு கா செயலாளர் கு.சரஸ்வதி உள்பட தாலுகா குழு உறுப்பினர்கள், கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியில் டவுன் கிளைச் செயலாளர் கொ.பெரியசாமி நன்றி கூறி னார்.
காங்கேயம்
மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா குழு சார்பில் காங்கேயம் பேருந்து நிலையத்தில் பட்ஜெட் கண் டன ஆர்ப்பாட்டம் நகர கிளைச் செயலா ளர் ஜெ.ராமநாதன் தலைமையில் நடை பெற்றது. இதில் முன்னாள் ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.குமாரசாமி, பி. வேலுச்சாமி, தாலுகா குழு உறுப்பினர் ஆர்.செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.கணேசன், சிஐ டியு மாவட்டக்குழு உறுப்பினர் கே.திரு வேங்கடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவநாதபுரம் லோகேஷ் நன்றி கூறினார்.
வேலம்பாளையம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் அ.புதூர் கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகரக்குழு உறுப்பி னர் அ.உமாநாத் தலைமை ஏற்றார். இதில், நகரச் செயலாளர் ச.நந்தகோ பால், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். கவிதா, நகரக் குழு உறுப்பினர் த.நாக ராஜ், சுகுமார் ஆகியோர் ஒன்றிய அர சின் பட்ஜெட்டை கண்டித்து பேசினர். இதில் பலர் பங்கேற்றனர்.
உடுமலை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடு மலை நகரக்குழுவின் சார்பில் உடு மலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நகரச்செயலாளர் தண்டபாணி தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டக்குழு உறுப்பினர் அ.பஞ்சலிங்கம் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். உடு மலை நகரக்குழு உறுப்பினர்கள் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.
அவிநாசி
அவிநாசி சேவூர் சாலையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமை ஏற் றார். இதில் ஒன்றியச் செயலாளர் அ. ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பி னர் ஆர்.பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சண்முகம், மாணவர் அரங்கக் கிளைச்செயலாளர் மணிகண் டன், திருமுருகன் பூண்டி நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜல்லிபட்டி
மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழு சார்பில் ஜல்லிபட்டி நால் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப் பினர் சி.மாசாணி தலைமை ஏற்றார். இதில், ஒன்றியச் செயலாளர் ஜெகதீ சன், மாவட்டக்குழு உறுப்பினர் கி.கன கராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் எம். பி.அருண்பிரகாஷ், விவசாய சங்க நிர் வாகி ராஜகோபால், வாலிபர் சங்க நிர் வாகி தமிழ்த்தென்றல் உள்ளிட்டோர் பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.