districts

img

“தை பிறந்தது, வழி பிறக்கல; வாழ்வாதாரமே அழிந்தது” டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை

தஞ்சாவூர்/திருவாரூர்/மயிலாடுதுறை, ஜன.20 - “மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று யானைக்கட்டி போரடித்த சோழ வள நாடு” என்ற வரி களை சொந்தம் கொண்டாட வேண்டிய காவிரி டெல்டா இயற்கையின் அழிவில்  சிக்கித் தவிக்கிறது.  வழக்கமாக பருவமழை வெள்ளத் தின் போது பாதிக்கப்பட்ட காவிரி கடை மடை மாவட்டங்கள் கடுமையான வறட்சி யாலும், பருவம் தவறி பெய்யும் அதீத  கனமழையாலும் விவசாயமே கேள்விக் குறியாகும் நிலைக்கு டெல்டா மாவட் டங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவ சாயியான டி.மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி உதயக்குமார் கூறுகை யில், “தை பிறந்தால் வழி பிறக்குமுனு சொல்லுவாங்க.. ஆனா எங்களுக்கு வாழ்வாதாரமே அழிஞ்சிட்டு, வட்டிக்கு கடன் வாங்கி நட்டதெல்லாம் போய்டுங்க... எப்படி மீளப் போறோம் என கண்ணீர் வழிய வேதனையுடன் பேசியதோடு, எங்கள போலவே மாவட்டம் முழுவதும் நெல்லு பயிட்ட விவசாயிங்க பாதிச்சிருக்காங்க...! பல்லாயிரம் ஏக்கருல விதைச்சிருந்த உளுந்து, பயறு எல்லாம் அப்படியே போய்விட்டது” என்று கூறி முடித்தார்.  பாதிப்பு குறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக் குழு வெளியிட்டுள்ள அறிக் கையில், “ஒவ்வொரு முறையும் மழை, வெள்ளம், வறட்சியால் மயிலாடுதுறை மாவட்டம் பாதிக்கப்படுவது போலவே,  நடப்பு சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 85 ஆயிரம் ஏக்கர் நெற்ப யிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி போ யுள்ளன.  பல்வேறு இடங்களில் அறு வடைக்கு தயாராக இருந்த கதிர்கள் முற்றிய நெற்பயிர்கள் மற்றும் இளம்ப யிர்கள் வயலோடு வயலாக சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. 

அதே போன்று, பல்லாயிரம் ஏக்கரில் விதைக்கப்பட்டிருந்த உளுந்து பயிர்களும் முற்றிலும் நாசமாகியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் நிவா ரணத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென” கோரிக்கை விடுத்து உள்ளது. தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரு  தினங்களாக பெய்த மழையால் அறு வடைக்கு தயாராக இருந்த நூற்றுக் கணக்கான ஏக்கர், சம்பா சாகுபடி பயிர்கள் வயலில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் மகசூல் பாதிக்கப்படும் என்ப தால் மிகுந்த கவலையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதத்தில் தஞ்சை மாவட்டத்தில் 10 நாட்களுக்கும்  மேலாக கனமழை பெய்தது. ஆரம்பத் தில் இந்த மழை சம்பா பயிர்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால் தொ டர்ந்து பெய்த கனமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. விவசாயிகள் பயிர்கள்  செழித்து வளர உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை தெளித்தனர்.  இருப்பினும் சித்திரக்குடி, கல்வி ராயன்பேட்டை, ஆலக்குடி பகுதி சம்பா பயிர்களில் புகையான் தாக்குதல்  அதிகம் இருந்தது. மேலும் 8 நம்பர் கரம்பை, வண்ணாரப்பேட்டை பகுதி களில் புகையான் மற்றும் நெல் பழம் நோய் தாக்குதல் காணப்பட்டது. காலை மற்றும் இரவு வேளையில் அதிகளவு பனி பெய்ததால் பயிர்கள் பாதிப்பை சந்தித்து வந்தன. இதுகுறித்து விவசாயி தமிழரசன், முகேஷ், கதிர்வேல் ஆகியோர் கூறு கையில், “தற்போது சாகுபடி செய்யப்பட் டுள்ள சம்பா பயிர்கள் நன்கு செழித்து  வளர்ந்த நிலையில் கடந்த மாதம்  பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், நெல் பழம் நோய் தாக்குதல் தென் பட்டது.  இருப்பினும் இன்னும் இரண்டு வாரத்தில் அறுவடை செய்து விடலாம். அதிக பாதிப்பு இருக்காது என்று நினைத் தோம். ஆனால் தற்போது 2 நாட்களாக பெய்த மழையில் பாதிக்கு பாதி நெல்பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக் கின்றன. இப்போது அறுவடையும் செய்ய முடியாது. வயல் ஈரப்பதமாக இருப்பதால் இயந்திரங்களை வைத்து அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. இதுவரை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.

தற்போது ஒரு ஏக்கர் வயலில் ஏறத்தாழ பாதிக்கு பாதி அளவில் நெற்  பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன. மழை  தொடர்ந்தால் சாய்ந்துள்ள நெற்பயிர்கள்  முளைக்க தொடங்கி விடும். இதனால் அறுவடை செய்தாலும் செலவு செய்த தொகைகூட கிடைக்காது. எனவே அதி காரிகள் இப்பகுதிகளை மீண்டும் ஆய்வு  செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றனர். இதுகுறித்து வேளாண் அதிகாரிகள்  தரப்பில் கூறுகையில், “தஞ்சை மாவட் டத்தில் தற்போது வரை 22 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிந்துள்ளது. மழை யின் காரணமாக திருப்பனந்தாளில் 100  ஏக்கர், கும்பகோணத்தில் 100 ஏக்கர், பாபநாசத்தில் 50 ஏக்கர் என்று  மொத்தம் 250 ஏக்கரில் நெல் பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது என்று தெரி வித்தனர்.

திருவாரூர்

அறுவடைக்கு தயாரான பயிர்கள்  அனைத்தும் மழையால் சாய்ந்துள்ள தால், அறுவடை நேரம் அதிகரித்து அறு வடை இயந்திரத்துக்கான வாடகையை  கூடுதலாக செலவு செய்ய வேண்டி யுள்ளது. மேலும், மகசூல் இழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. விவசா யிகள், செலவு செய்த முதலீட்டைகூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நன்னிலம் அருகே உள்ள வேலங்குடி, திருக்கொட்டாரம் கிராம விவசாயிகள் கூறுகையில், “எதிர் பாராத மழை காரணமாக அறுவடை பயிர்கள் சாய்ந்து விட்டதால் நெல் அறுவடை செய்ய இயந்திர செலவுக்கு மானியம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் பயிர் காப்பீடு நிறுவனங்களிடமிருந்து உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பெற்றுத் தர வேண் டும்” என்றனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த  இரண்டு தினங்களாக பெய்த கனமழை யால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இதனை சிபிஎம் சட்டமன்ற குழு தலை வரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பின ருமான நாகைமாலி எம்எல்ஏ நேரில்  ஆய்வு செய்தார். அப்போது விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே. சித்தார்த்தன், சிபிஎம் நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடி வேல், வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் டி.அருள்தாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மழை, நெல்பழ நோயால் பயிர்கள் பாதிப்பு  பயிர்களை ஏந்தி வந்து ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

தஞ்சாவூர், ஜன.20 -  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், கோவில் பத்து உட்பட சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில் சம்பா சாகுபடியில் நெல் பழம் நோய் தாக்குதல் மற்றும் மழை யால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவா ரணம் வழங்க வேண்டும் எனக் கோரி பாதிக்கப்பட்ட பயிர்களை கையில் ஏந்திய படி வந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வரு வாய் அலுவலர் தெ.தியாகராஜன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.  அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் என். வி.கண்ணன் தலைமையில், மாதர் சங்க  மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செய லாளர் சி.பாஸ்கர், தமிழ்நாடு விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.தமிழ ரசன், பூதலூர் வட்டாரத் தலைவர் சுந்தர வடிவேலு ஆகியோர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:  பூதலூர், கோவில்பத்து, நாச்சியார் பட்டி, பாலாயிவயல், கெங்கைசமுத்திரம், வீரமரசம்பேட்டை, ஆவாரம்பட்டி, தொண் டராயன்படுகை, நந்தவனப்பட்டி, அய்யனாபுரம் பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொண்டிருந்தனர். இப்பகுதியில் நெல் பயிரில் நெல் பழம்  நோயின் தாக்குதல் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் கதிர் முழு வதும் பதர் ஆகிவிட்டது.  இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் அறுவடைக்கு தயாராக  இருந்த கதிர்கள் முழுவதும் வயலில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் விவசா யிகளுக்கு மகசூலில் பெரும் இழப்பு ஏற்ப டும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பூதலூர் பகுதிக்கு குறைந்த அளவிலேயே நிவா ரணம் அறிவிக்கப்பட்டு கணக்கு எடுக்கப் பட்டுள்ளது. தற்போது நெல்பழம் நோய் தாக்குதல்  மற்றும் தற்போதைய மழையால் பயிர்கள்  பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. எனவே,  தற்போது பாதிப்புக்கு உள்ளான பயிர்களை  தனியாக ஆய்வு செய்து ஏக்கருக்கு ரூ.35  ஆயிரத்தை அரசு நிவாரணமாக வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.